search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trade union leader"

    வர்த்தக சங்க தலைவருக்கு முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் முகமது அபுபக்கர் (வயது52). சாயல்குடி வர்த்தக சங்க தலைவராகவும், தரைக்குடி ஜமாத் தலைவராகவும் உள்ளார்.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திக்குவிஜயன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முகமது அபுபக்கர், எஸ்.தரைக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாயல்குடிக்கு புறப்பட்டார்.

    ஆர்.சி.புரம் பகுதியில் அவர் வந்தபோது திக்கு விஜயனின் மகன்கள் உமயவேலாயுதம், தங்கபாண்டி ஆகியோர் வழிமறித்தனர். அவர்கள் முகமது அபுபக்கரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து சாயல்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோக்கின் ஜெரி விசாரணை நடத்தி திக்குவிஜயன் மகன்கள் உமயவேலாயுதம், தங்கப்பாண்டி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் உமய வேலாயுதம் கைது செய்யப்பட்டார்.

    கேரளாவில் முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க தலைவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. #KeralaUnionLeader
    கொல்லம்:

    கேரளாவில் முந்திரி ஆலைத் தொழில் நலிவடைந்து வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில், முந்திரி தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, இன்று கொல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த தொழிற்சங்க தலைவர் இ.காசிம் (வயது 69), திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவரது மறைவினால் கூட்டத்தில் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். முதல்வர் பினராயி விஜயன் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

    ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினரான காசிம், தற்போது சி.ஐ.டி.யு.யுடன் இணைந்த கேரளா முந்திரி தொழிலாளர்கள் மைய பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். இதுதவிர கேரள மாநில முந்திரி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

    அவரது மறைவுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #KeralaUnionLeader

    ×