search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tri series"

    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvENGA #ENGAvINDA
    லண்டன்:

    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் சாம் ஹெய்ன், லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

    இருவரும் சேர்ந்து 150 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய சாம்
    ஹெயின் 108 ரன்களும், லியம் லிவிங்ஸ்டோன் 83 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

    இந்தியா ஏ சார்பில் தீபக் சாஹர், கலீல் அகமது தலா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ரிஷப் பந்த் 15 ரன்னிலும், மயங்க் அகர்வால் 40 ரன்னிலும், ஷுப்மான் கில் 20 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னிலும், ஹனுமா விஹாரி 37 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த குருணால் பாண்ட்யா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இந்தியா ஏ அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தியது. #INDAvENGA #ENGAvINDA
    இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வாலின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ அணி. #EnglandTriseries #INDAvWIA
    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ஏ அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சந்தர்பால் ஹேமராஜ் 45 ரன்களும், ஜேசன் மொகமது 31 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.

    இந்திய வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சிக்கினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் தாமஸ் 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ஏ அணி சார்பில் தீபக் சஹார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரக இறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 102 ரன்களில் அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார். 
     
    இறுதியில், இந்தியா ஏ அணி 38.1 ஓவரில் 222 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், நிக் கபின்சின் சிறப்பான சதத்தால் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ் அணி. #EnglandTriseries #EnglandLions #IndiaA
    லண்டன்:

    இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்தியா ஏ அணி சார்பில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 55 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களுடனும், ஷுபமன் கில் 37 ரன்களுடனும் வெளியேறினர்.



    மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா ஏ அணி 46.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
     
    இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் லியாம் டாசன் 4 விக்கெட்டுகளும், டாம் ஹெல்ம் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய நிக் கபின்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு சாம் ஹைன் ஒத்துழைப்பு தந்து அரை சதமடித்து 54 ரன்களில் அவுட்டானார்.

    இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிக் கபின்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா ஏ சார்பில் ஷ்ர்துல் தாகுர் 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #EnglandTriseries #EnglandLions #IndiaA
    ×