search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two leaves symbol case"

    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியது. #TwoLeaves #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதம் நிறைவடைந்தது.

    இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ராஜா செந்தூர்பாண்டி, அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் விஸ்வநாதன், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையாளர் பகுதியில் ஆஜராகி இருந்தார். இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  #TwoLeaves #DelhiHighCourt
    டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #AIADMK #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் ஏற்கனவே சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதங்கள் முடிவடைந்துள்ளன. அவர்களின் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் வாதாடினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் வாதங்களை முடித்த நிலையில் மூத்த வக்கீல் விஸ்வநாதன் வாதங்களை தொடர்ந்து வந்தார்.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விஸ்வநாதன் தன்னுடைய வாதத்தில், சசிகலா உள்ளிட்டோர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கட்சியின் அன்றாட நடைமுறையில் எந்த உரிமையும் கிடையாது. எனவே அவர்கள் கட்சியின் மீதும், சின்னத்தின் மீதும் எந்த உரிமையும் கோர முடியாது என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #AIADMK #DelhiHighCourt

    ×