என் மலர்
நீங்கள் தேடியது "udhaipur tailor murder"
- முன்தைய விசாரணையில் 12-ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 7 பேரும் ஜெய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் கன்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த கொலையில் தொடர்புடைய மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முகமது மொஹ்சின், வாசிம் அலி மற்றும் ஃபர்ஹாத் முகமது ஷேக் ஆகியோரை வெவ்வேறு தேதிகளில் என்ஐஏ கைது செய்தது. 7 குற்றவாளிகளும் ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜெய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.






