search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udhaynidhi stalin"

    • நடிகர் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘லவ்வர்’.
    • இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.


    இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், அமைச்சர் உதயநிதி 'லவ்வர்' திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் மணிகண்டனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணிகண்டன் வெளியிட்டுள்ள பதிவில், "தொலைபேசி அழைப்பின் மூலம் வாழ்த்தியதற்கு நன்றி உதயநிதி ஸ்டாலின் சார். நீங்கள் எங்கள் 'லவ்வர்' படத்தை பார்த்து ரசித்தீர்கள் என்பது சந்தோஷமாக உள்ளது. இது எனக்கு இன்னும் சிறந்த கதாபாத்திரங்களை செய்ய ஊக்கமளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம்.
    • இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதாகவும் இதற்கான பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தி.மு.க. தெரிவித்து வருகிறது. அந்த வகையில், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    மேலும், இந்த திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன்படி கையெழுத்து இயக்கம் துவங்கி இன்றுடன் (டிசம்பர் 09) 50 நாட்கள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த #நீட்_விலக்கு_நம்_இலக்கு கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது."

    "'50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்' என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது."

    "இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்."

    "இந்த கையெழுத்துகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம். இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாக பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை.
    • இந்த நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.


    தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் ஏராளமான செயல் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளும் செய்தியாளர்களுக்கான நலனில் தேவைப்படும் செயல் திட்டங்களும் கூடிய விரைவில் முதலமைச்சர் ஆலோசனைபடி நிறைவேற்ற தேவையானதை செய்வோம் என்றார்.

    • சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம்.
    • இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது.

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடைபெற்றது.

    முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கருணாநிதி கூறுவார். இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது. இப்போது திமுகவில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது.

    மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நான் இப்போது வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும்.

    சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளுடன் சேர்த்து, அடிமைகளின் எஜமானர்களை விரட்டி வீட்டுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • இவருக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இன்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

     

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்" என்று தெரிவித்திருந்தார்.

     

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    இந்நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதிக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும், பந்தயங்களும், போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கணும். இந்தக் கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி உதயநிதி ஸ்டாலின்" என குறிப்பிட்டுள்ளார்.

    'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினுடன், சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

     

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உதயநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-

    அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. இளைஞர் நல துறைக்கு என்ன செய்ய போகிறீர்கள்?

    பதில்: அத்தனை பேரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்கும் போதும், விமர்சனங்கள் வந்தன. கண்டிப்பாக இப்போதும் விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் மீறி எனது செயல்கள் இருக்கும். என் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலமே பதிலடி கொடுப்பேன்.

    சட்டமன்ற உறுப்பினரான போதும் விமர்சனங்கள் எழுந்தன. என்னால் முடிந்த அளவுக்கு தலைவரின் ஆணையை ஏற்று இளைஞர் அணி துணை செயலாளராக மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரது ஒத்துழைப்போடும் பொறுப்பை உணர்ந்து சரிவர பணிகளை செய்வேன்.

    சீனா போன்ற நாடுகளில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

    பதில்: இப்போதுதான் அலுவலகத்துக்கு சென்று முதல் கையெழுத்தை போட உள்ளேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற வேண்டும் என்கிற ஐடியா உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கான பணிகளை தொடங்கி முடுக்கி விடுவதற்கான வேலைகள் நடைபெறும். அமைச்சர் பதவியை இன்னொரு கூடுதல் பொறுப்பாகவே பார்க்கிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் எனது பணிகள் இருக்கும்.

    உங்கள் மீதான எதிர்பார்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: அனைவர் மீதும் எதிர்பார்ப்புகள் உள்ளன. வாரிசு அரசியல் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதற்கெல்லாம் எனது செயல்களே பதிலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


    உதயநிதி ஸ்டாலின்

    இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்." என்று கூறினார்.


    உதயநிதி ஸ்டாலின்

    பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×