search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK General Election"

    • இங்கிலாந்தில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
    • இதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தன் மனைவி அக்ஷிதா மூர்த்தியுடன் நார்த் யார்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் அருகிலுள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

    இதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

    தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களுக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

    பிரதமர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். இந்த தேர்தலில் தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இன்று இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    • இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது.
    • தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

    இங்கிலாந்தில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, "பாராளுமன்றத்தை கலைக்க இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் கோரினேன். இந்த கோரிக்கையை மன்னர் ஏற்றுக்கொண்டார். ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தலை நடத்துவோம். இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது" என்றார்.

    இங்கிலாந்தில் 2025-ம் ஆண்டு ஜனவரிக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று கூறிவந்தார். இதற்கிடையே தேர்தல் தேதி வெளியாகி உள்ளது. 

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்றார். ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக சந்திக்கும் தேர்தல் இதுவாகும். 2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும்.

    இதனிடையே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக கூறியிருந்தது.

    இது தொடர்பாக தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒரு முழுமையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரக்குழு தயாராக உள்ளது. நாடு தற்போது பொதுத் தேர்தல் வேண்டும் என்று விரும்புகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

    ×