என் மலர்
முகப்பு » union govt advocate general
நீங்கள் தேடியது "union govt. Advocate General"
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் நிறைவடைந்தது.
மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வக்கீல் ஆர்.வெங்கடரமணியை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ந் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் 3 மாதங்கள் தொடர அவரை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனை ஏற்ற அவா் தற்போது அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வக்கீல் ஆர்.வெங்கடரமணியை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் தலைமை வக்கீலாக வெங்கடரமணி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
×
X