என் மலர்
நீங்கள் தேடியது "Union Minister Amit Shah"
- முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நடைபெற உள்ளது.
இதனால், தேர்தலில் வெற்றி கனியை சுவைக்க, கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகத்திற்கு மூன்று முறை வந்து பிரசாரம் நடத்தினார்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் ஏப்ரல் 4ம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
இதைதொடர்ந்து, வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னையை அடுத்து, மதுரை, சிவகங்கை தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சந்திப்பு.
- சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தல்.
தமிழக எம்.பிக்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்ஷாவை சந்தித்தனர்.
டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறும், சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறும் எம்.பி.க்கள் குழு அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்பின்போது, திமுக- டி.ஆர்.பாலு, ம.தி.மு.க- வைகோ, சி.பி.ஐ- சுப்பராயன், சி.பி.எம்.- நடராஜன் உள்ளிட்டோர் அமித்ஷாவுடன் சந்தித்தனர்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் சட்சி- ரவிக்குமார், ஐ.யு.எம்.எல்- நவாஸ் கனி, கொங்கு நாடு மக்கள் கட்சி- சின்ராஜ் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர்.