search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union minister nadda"

    • சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
    • தமிழகத்தில், எச்எம்பிவி உருமாறப்பட்ட தொற்று ஏதும் இங்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

    எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால், தமிழகத்தில் எம்எம்பிவி வைரஸ் பரவலுக்கு மாநில சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், எச்எம்பிவி உருமாறப்பட்ட தொற்று ஏதும் இங்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், எச்எம்பிவி புதிய வைரஸ் அல்ல, அதனால், மக்கள் பீதியடைய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    எச்எம்பிவி தொற்று தொடர்பாக நாட்டின் சுகாதார அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு, வளர்ந்து வரும் எந்தவொரு சுகாதார சவாலுக்கும் உடனடியாக பதிலளிக்க தயாராக இருப்பதை உறுதி செய்வதில் நாடு விழிப்புடன் உள்ளது. இந்த தொற்றால் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

    எச்எம்பிவி வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்று சுகாதார நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இது முதன்முதலில் 2001-ல் கண்டறியப்பட்டது மற்றும் அது உலகம் முழுவதும் பரவி வருகிறது. HMPV சுவாசத்தின் மூலம் காற்றில் பரவுகிறது.

    இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர்காலத்தின் துவக்கத்தில் வைரஸ் அதிகமாக பரவுகிறது.

    கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும், தமிழகத்தில் இரண்டு குழந்தைகளும் எச்எம்பிவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். #GajaCyclone #Nadda
    சென்னை:

    கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது.



    இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி ஜெ.பி.நட்டா, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டு அறிந்தார்.

    அப்போது அவர், புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். #GajaCyclone #Nadda
    ×