search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U.P.S. Pension Scheme"

    • அரசுப் பணியாளர்களுக்கான யு.பி.எஸ். திட்டம் ஏப்.1-ந்தேதிமுதல் அமலுக்கு வர உள்ளது.
    • யு.பி.எஸ். திட்டத்தை மாநில அரசுகளும் அமல்படுத்தலாம்

    புதுடெல்லி:

    நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி (என்.பி.எஸ்). கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு உறுதியான ஓய்வூதியம் கிடைக்காது.

    அத்துடன் அரசுப் பணியாளர் ஒருவர் கடைசியாக என்ன ஊதியம் வாங்கினாரோ, அதில் 50 சதவீதத்துக்கு நிகராக ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்த பழைய ஏற்பாட்டையும் என்.பி.எஸ். மாற்றியமைத்தது.

    இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (யுபி எஸ்) மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசுப் பணியாளர்களாக குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தாங்கள் கடைசியாக பெற்ற

    ஊதியத்தில் மீண்டும் 50 சத வீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவதையும், பணவீக்க (விலைவாசி உயர்வு விகிதம்) போக்குகளுக்கு ஏற்ப அவ்வப்போது அகவிலைப்படி உயர்வுபெறுவதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

    25 ஆண்டுகளை நிறைவு செய்யாவிட்டாலும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் மத்திய அரசுப் பணியாளர்களாகப் பணியாற்றியிருந்தால், அவர்களும் குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதை யு.பி.எஸ். திட்டம் உறுதி செய்கிறது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, மத்திய அரசுப் பணியாளர்களுக்கான யு.பி.எஸ். திட்டம் ஏப்.1-ந்தேதிமுதல் அமலுக்கு வர உள்ளது.

    யுபிஎஸ் திட்டத்தில் சேருவோர், புதிய ஓய்வூதிய திட்டத்தில் (என்.பி.எஸ்.) மீண்டும் இணைய முடியாது. யு.பி.எஸ். திட்டத்தை மாநில அரசுகளும் அமல்படுத்தலாம்.

    ×