search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "upside down"

    • அட்மாஸ்ஃபியர் எனப்படும் ரைட் திடீரென செயல்படாமல் போனதால் அதிர்ச்சி.
    • மறு அறிவிப்பு வரும் வரை ரைடு செயல்படாது என அறிவிப்பு.

    அமெரிக்காவில் உள்ள ஓரிகானின் மாகாணத்தில் அமைந்துள்ள போர்ட்லேண்ட் நகரத்தில் நூற்றாண்டு பழமையான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.

    கோடை விடுமுறைக்காக பூங்கா நேற்று முதல் திறக்கப்பட்டது. இங்கு, ஏராளமான மக்கள் வந்து இங்குள்ள ரைடுகளில் தங்களின் நேரத்தை போக்கி வந்தனர்.

    இந்நிலையில், AtmosFEAR எனப்படும் ரைடர் ஒன்றில் ஏறிய மக்கள் சுமார் அரை மணி நேரம் தலைகீழாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அட்மாஸ்ஃபியர் எனப்படும் ரைட் திடீரென செயல்படாமல் போனதால், அதில் இருந்த மக்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.

    பிறகு, இதுகுறித்து தகவல் தெரியவந்த நிலையில் அவசரகால பணியாளர்கள் ரைடரை சரிசெய்து அதில் இருந்து 28 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    இதுகுறித்து கேளிக்கை பூங்காவில் உள்ள அதிகாரிகளின் அறிக்கையின்படி, "அவசரகால குழுவினர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 28 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது" என்றது.

    இந்த ரைடு கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவம் இதுவரை இங்கு நடந்ததில்லை என்று பூங்கா தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை ரைடு செயல்படாது என்றும் தெரிவித்தது.

    இருப்பினும், ரைடில் தலைகீழாக தொங்கும் மக்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×