என் மலர்
நீங்கள் தேடியது "Usilampatti bus station"
மதுரை:
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி மனைவி அமிர்தவல்லி (வயது29). இவர் சம்பவத்தன்று இரவு சென்னைக்கு செல்வதற்காக உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த கைப்பையில் 14 பவுன் நகை இருந்ததாக தெரிகிறது.
அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதையடுத்து அமிர்தவல்லி உசிலம்பட்டி-தேனி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு பஸ் நிலையம் திரும்பினார்.
இந்த நிலையில் அமிர்தவல்லி தற்செயலாக கைப்பையை சோதித்து பார்த்தார். அப்போதுதான் பையில் இருந்த 14 பவுன் நகைகள் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அமிர்தவல்லி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குணசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
உசிலம்பட்டி போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






