என் மலர்
நீங்கள் தேடியது "uttar pradesh accident"
- பஸ்சில் 60 பேர் பயணம் செய்தனர்.
- விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலை ரேபரேலியில் இருந்து டெல்லியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 60 பேர் பயணம் செய்தனர். அப்போது லக்னோவில் இருந்து ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தவறான பாதையில் வந்தது.
இதில் கார் மீது பஸ் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேரும், காரில் பயணம் செய்த 3 பேரும் பலியானார்கள். 25 பேர் காயம் அடைந்தனர்.






