search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varieties of gram"

    • வீன விவசாயத்தில் மகசூல் எந்த அளவுக்கு அதிகம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்புகளும் அதிக அளவில் இருக்கிறது.
    • விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    உடுமலை :

    முன்னோர்கள் ஒவ்வொரு பகுதியிலுள்ள மண் வளத்துக்கு ஏற்ற விதைகள், பருவத்துக்கு ஏற்ற விதைகள், வறட்சியான பகுதிக்கு ஏற்ற விதைகள் என ஒவ்வொரு பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ற விதைகளைப்பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக கத்தரியை எடுத்துக்கொண்டால் நெகமம் வரி கத்தரி, உடுமலை சம்பா கத்தரி, காரமடை கத்தரி, ஒட்டன்சத்திரம் பச்சைக்கத்தரி, பொள்ளாச்சி புளியம்பூ கத்தரி என்று பகுதிக்கு ஏற்ற ரகங்களைப் பயிரிட்டு வந்தனர். இதனால் இழப்பு இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தனர்.

    ஆனால் இன்றைய நவீன விவசாயத்தில் மகசூல் எந்த அளவுக்கு அதிகம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்புகளும் அதிக அளவில் இருக்கிறது. எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வதில் ஆர்வம் காட்டும் பலரும் நமது பாரம்பரிய ரகப் பயிர்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அந்த வகையில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுப்பதில் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து தமிழக அரசும் கைகொடுக்கிறது. பாரம்பரிய நாட்டு ரகங்களை சாகுபடி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி உடுமலை பகுதியில் பாரம்பரிய ரக அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளதாக உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா தெரிவித்துள்ளார்.

    ×