என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » veera sivaji
நீங்கள் தேடியது "Veera Sivaji"
96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகர் சங்கம் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து எஸ்.நந்தகோபால் விளக்கம் அளித்துள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படத்தை தயாரித்தவர் எஸ்.நந்தகோபால். இவர் தனது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் விஷால் நடித்த கத்தி சண்டை, விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி, உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்த படங்களில் நடித்துள்ள விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்து இருப்பதாகவும், இனிமேல் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகர்-நடிகைகள் நடிக்க கூடாது என்றும், அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்றும் நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அதற்கு பதில் அளித்து நந்தகோபால் கூறியதாவது,
கத்தி சண்டை படம் வெளியிடுவதற்கு முன்பே விஷாலுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டேன். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் மனசாட்சிபடி செயல்பட்டு வருகிறேன். 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் முழு ஊதியத்தையும் வழங்கி விட்டேன்.
இந்த நிலையில் எனது படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதில் நடிகர் சங்க நிர்வாகிகள் கையெழுத்து இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. எனக்கு எதிரான இந்த அறிக்கையை சிலர் வேண்டுமென்றே அனுப்பி இருப்பதாக சந்தேகம் எழுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) உரிய முடிவை எடுக்க வேண்டும். அதற்கு கட்டுப்படுவேன். தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால் தொழில் செய்ய விடாமல் என்னை தடுப்பதாக டெல்லியில் உள்ள இந்திய தொழில் போட்டி ஆணையத்தில் புகார் செய்வேன்.
இவ்வாறு கூறியுள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil #SNanadgopal
விஜய் சேதுபதியின் 96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சங்க உறுப்பினர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. #96TheMovie #MadrasEnterprises
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சங்க உறுப்பினர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் நடித்த கத்தி சண்டை, துப்பறிவாளன், விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி, விஜய் சேதுபதியின் 96 உள்ளிட்ட படங்களை எஸ்.நந்தகோபால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இந்த படங்களில் நடித்த, நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களான நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதால் சங்க உறுப்பினர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விஷாலின் துப்பறிவாளன், விக்ரம்பிரபுவின் வீரசிவாஜி படங்களில் சம்பள பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும் 96 என்ற திரைப்படத்தில் நடித்த விஜய்சேதுபதியின் ஊதிய பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது.
மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது.
படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில், நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்த நற்செயலை சில தயாரிப்பாளர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டு, நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாகி வருகிறது.
கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது.
அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் அல்லது தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள்/நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும், திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #MadrasEnterprises
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X