என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetarian food"

    • இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு.
    • சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    இந்தியாவிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமான இரவு உணவு விருந்து அளித்தார்.

    இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு. இந்த மெனுவில் சிறப்பு ஈர்ப்பாக காஷ்மீர் உணவான 'குச்சி தூன் செடின்' இருந்தது.

    இது மிகவும் விலையுயர்ந்த 'Gucci ' காளான்களால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை உள்ளது.

    குச்சி காளான்கள் மிகவும் அரிதானவை என்பதால் இந்த விலை. அவை ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்.

    பனி உருகிய பிறகு, தனித்துவமான மண் மற்றும் வெப்பநிலை நிலைகளில் வசந்த காலத்தில் மட்டுமே அவை இயற்கையாக வளரும். சில நேரங்களில் காட்டுத் தீக்குப் பிறகும் அவை முளைக்கின்றன.

    இந்த காளான்களை சேகரிப்பதும் மிகவும் கடினமான பணியாகும். உள்ளூர்வாசிகள் மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணித்து அவற்றை சேகரிப்பர். சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    குச்சி புலாவ், யக்னி மற்றும் ரோகன் ஜோஷ் போன்ற பாரம்பரிய காஷ்மீரி உணவுகளைத் தயாரிக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.   

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறியதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணம். #DMKLeader #Karunanidhi #BlackDog
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவ பிரியராக இருந்தார். தினமும் அவரது உணவில் ஏதாவது அசைவ உணவு இருக்கும்.

    அந்த அளவுக்கு அசைவ உணவை விரும்பி சாப்பிட்டு வந்தார். திடீரென்று கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறினார். அதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணமாகும்.

    கருணாநிதி, தொண்டர்கள் மீது மட்டுமல்ல வளர்ப்பு பிராணிகள் மீதும் அதிக பாசம் வைத்திருந்தார். வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வந்தார்.

    கருப்பு நிறம் கொண்ட நாய் மீது கருணாநிதி அதிக பிரியம் செலுத்தி வந்தார். அவர் என்ன உணவு சாப்பிடுகிறாறோ அதை அந்த நாய்க்கும் கொடுப்பார். அவரிடம் நாய் துள்ளி குதித்து மடியில் ஏறி விளையாடும்.

    அந்த நாய் திடீர் என்று இறந்து விட்டது. இதனால் கருணாநிதி துயரம் அடைந்தார். அதன் பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சைவ உணவுக்கு மாறினார்.


    இதுகுறித்து கனிமொழி கூறுகையில், “கருப்பு நாய் மீது அதிகம் பாசம் வைத்திருந்த கலைஞர் அது இறந்ததால் சோகம் அடைந்தார். அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம். அது நினைவாக ஒரு மரக்கன்று நட்டு வைத்தோம்.

    நாய் திடீரென்று இறந்தது கலைஞரை மிகவும் பாதித்தது. அதனால் அவர் அசைவ உணவு சாப்பிடுவதை 2 ஆண்டுகள் நிறுத்தி விட்டார். மருத்துவ காரணங்களுக்காக அசைவ உணவு சாப்பிட டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்” என்றார்.

    கவிஞர் இளையபாரதி கூறுகையில், “ஒருமுறை ராஜாத்தி அம்மாள் கீழே கிடந்த உலர் திராட்சையை மிதித்து வழுக்கி விழுந்து காலில் காயம் அடைந்தார். அன்று முதல் அந்த கருப்பு நிற நாய் உலர்திராட்சையை வீசினாலும் சாப்பிடாது. அந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தது” என்றார். #DMKLeader #Karunanidhi
    ×