என் மலர்
முகப்பு » Vettuwapalayam
நீங்கள் தேடியது "Vettuwapalayam"
- ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் ,பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி வேட்டுவபாளையம் பகுதியில் கிங் ஆப் ஆர்.எப்., மற்றும் கே.டி.எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 14வயதுக்குட்பட்டோருக்கான கே.டி.எம்.சாம்பியன்ஸ் டிராபி (வாலிபால் போட்டி) நடைபெற்றது.இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் ,பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.இதில் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள், மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் முதல் இடம் பிடித்தன.
இரண்டாம் பரிசை வேலவன் பள்ளி அணியும் , மூன்றாம் பரிசை ஜெய் சாரதா பள்ளி அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பரிசுக்கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சதிஷ் குமார், ஞானவேல், ஆர்.எப்.குழு நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
X