search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "video goes viral"

    • சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிக்க செய்யும்.
    • தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி.

    சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பார்ப்பவர்களை மிகவும் ரசிக்க செய்யும். அந்த வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    இந்த போட்டிகளை பொறுத்தவரை குழந்தைகள் ஒருபுறம் இருந்து மறுபுறம் இருக்கும் வெள்ளை கோடான இலக்கை வந்தடைய வேண்டும்.

    தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் குழந்தைகள் இலக்கை அடைய செய்வதற்கு பெற்றோர்கள் பெரும் பாடுபடுவார்கள்.

    அதே போல போட்டியின் போது மழலை குழந்தைகளின் சேட்டைகளும் பார்வையாளர்களை பெரிதும் கவரும். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தவழும் குழந்தைகள் இலக்கை அடைவதற்காக பெற்றோர்கள் ஊக்குவிக்கும் காட்சி உள்ளது.

    அதில் ஒரு குழந்தை போட்டி நடைபெறும் இடத்திலேயே படுத்து தூங்குவது போன்றும், அந்த குழந்தையை விழிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் பாடுபடுவதும் போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது.
    • உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், பெல் தரோடாவை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இவரது தாயார் கூலி வேலை செய்து மகளைக் காப்பாற்றி வந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது. உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிறுமியின் தாய் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்த சிறுமி நிலைகுலைந்து காணப்பட்டார்.

    தனக்கு இருந்த ஒரே ஆதரவும் தற்போது இல்லாததால் மன வேதனை அடைந்தார். தாயின் இறுதி சடங்குகளை செய்ய பணம் இல்லாததால் தாயின் பிணத்தருகே அழுதபடி உட்கார்ந்து இருந்தார்.

    பின்னர் தாயின் இறுதி சடங்கு செய்வதற்காக உதவி செய்யுமாறு கிராம மக்களிடம் கேட்டார்.

    தரையில் துண்டை விரித்து விட்டு சோகமாக உட்கார்ந்து இருந்தார். இது கண்போரை கண்கலங்க செய்தது. சிறுமியின் பரிதாப நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியபடி சிறிது சிறிதாக பண உதவி செய்தனர்.

    இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    இதனைக் கண்ட தெலுங்கானா பாரத ராஷ்டிரிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் விரைவில் சிறுமிக்கு நிதி உதவி அளிப்பதாகவும் தற்போது அப்பகுதி கட்சி நிர்வாகியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து இறுதி சடங்கு செய்ய அனைத்து உதவியும் செய்ய உத்தரவிட்டார்.

    இதனையடுத்து சிறுமியின் தாயின் இறுதிச் சடங்குக்காண அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

    பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமிக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுதது வருகின்றனர்.

    ×