search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "video release"

    • கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
    • சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.

    எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரியை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு முன்பு கஸ்தூரி வெளியிட்டு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோவில், " நான் தலைமறைவாகவில்லை, ஓடி ஒளியவில்லை. ஐதராபாத்தில் எனது வீட்டில் தான் இருந்தேன்.

    படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வந்திருந்தேன். தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன்.

    நேற்று படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது தான் கைது செய்தனர். என்னிடம் எனது செல்போன் இல்லை, வழக்கறிஞரிடம் கொடுத்திருந்தேன்" என கூறினார்.

    காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். #ChennaiEncounter
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். 

    அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் காவலர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக போலீசர் 6 பேர மீது வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது ரவுடி ஆனந்தன் தப்பினார்.

    இதற்கிடையே, தப்பிச்சென்ற ரவுடி ஆனந்தனை சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி ஆனந்தன் என்பவரை போலீசார் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.  ரவுடிகளை பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் ரவுடி ஆனந்தனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றோம் என கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்தார்.

    இந்நிலையில், காவலர் ராஜவேலுவை ரவுடிகள் தாக்கியதில் கழுத்தில் வெட்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ரவுடிகளிடம் வெட்டுப்பட்டதும்  அங்கிருந்து தப்பி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. #ChennaiEncounter


    ×