search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikramaditya Singh"

    • ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
    • மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது எங்கள் பொறுப்பு.

    இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி. கங்கனா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், " நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை.

    ஆதலால் என் தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும். மேலும் என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்க முடியும்" என்று கூறியிருந்தார்.

    இதற்கு, அம்மாநில காங்கிரஸ் தலைவரும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவருமான விக்ரமாதித்ய சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு கூட்டத்திற்கு தங்கள் ஆவணங்களைக் கொண்டு வருமாறு மக்களைக் கேட்பது சரியல்ல. மக்கள் தன்னை சந்திக்க விரும்பினால் ஆதார் அட்டையைக் கொண்டு வரத் தேவையில்லை. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது எங்கள் பொறுப்பு. அது ஒரு சிறிய பணியாக இருந்தாலும், பெரிய பணியாக இருந்தாலும், கொள்கை விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட வேலையாக இருந்தாலும், அதற்கு எந்த அடையாளமும் தேவையில்லை என்றார்.

    • கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநில மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான பிரதிபா சிங் போட்டியிடுகிறார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரதிபா சிங் போடடியிடுகிறார். இவரது மகன் விக்ரமாதித்யா சிங் இமாச்சல பிரதேச மாநில மந்திரியாக இருந்து வருகிறார்.

    தனது தாயாருக்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விக்ரமாதித்யா சிங். இந்த நிலையில் கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணி என விக்ரமாதித்யா சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விக்ரமாதித்யா சிங் கூறியதாவது:-

    கங்கனா ரனாவத் சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சர்ச்சைகளின் ராணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர் அவ்வப்போது பேசியது தேர்தலில் கேள்வி எழுப்பப்படாது என்று நினைத்தால், அதன்பின் அவருக்கு ஜெய் ஸ்ரீராம்.

    பிரச்சனைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும். அதற்கு அவர் பதில் அளித்தாக வேண்டும். குறிப்பாக இமாச்சல பிரதேச மாநலித்தின் மண்டி தொகுதி மக்களுக்கு.

    இவ்வாறு விக்ரமாதித்யா தெரிவித்துள்ளார்.

    மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கங்கனா ரனாவத்திற்கு எதிராக எழும்பிய குற்றச்சாட்டு குறித்து கூறுகையில் "கடவுள் ராமர் அவருக்கு அருளாசி வழங்கட்டும். இந்த மாநில மக்களவை பற்றி ஏதும் தெரியாத அவர் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் அவர் தேவ் பூமியில் இருந்து திரும்புவார்" என்றார்.

    ஆனால், கங்கனா ரனாவத், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்றார்.

    ×