என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Village Panchayts"
- 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
- கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.
திருப்பூர் :
சுதந்திர தினத்தை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதத்தில், சுகாதாரத்தை பேணுதல், நெகிழி உற்பத்திப் பொருள்களை தடை செய்தல், நீா் வழிப்பாதை மற்றும் நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.
இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.ஆகவே, பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.
திருப்பூர் :
ஊராட்சிகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட இனங்கள் மட்டுமே முக்கிய வருவாய் இனமாக உள்ளன. வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்நிறுவனங்கள், ஆண்டுதோறும், உரிமக்கட்டணம் செலுத்தி, உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சி நிர்வாகங்கள், உரிமக்கட்டணம் வசூலிப்பதில்லை. புற்றீசல் போல நிறுவனங்கள் உருவாகிய பின்பும் கூட, உரிம புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.
இந்நிலையில் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் உடுமலை ஒன்றியத்தில், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் எந்திரம் நிறுவி தொழில் உரிமம் வழங்க, திருத்திய உரிமக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஒன்று முதல் 5 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 50 ரூபாய், 5 முதல் 10 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 100 ரூபாய், 10 முதல் 25 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 80 ரூபாய்,25 முதல் 50 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 70 ரூபாய், 51 முதல் 100 குதிரைத் திறன் வரை, ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 60 ரூபாய், 100 முதல் 200 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும், 40 ரூபாய்,201 முதல் 500 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 30 ரூபாய், 501 குதிரைத்திறனுக்கு மேல் ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 20 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல எந்திரம் ஒன்றுக்கு 50 ரூபாய், ஆய்வுக்கட்டணம் 3,000 ரூபாய், வரைபடக் கட்டணம், 500 ரூபாய், நிலம் கட்டணம் 2,000 ரூபாய் என வசூலிக்கப்படவுள்ளது.எனவே கிராம ஊராட்சி பகுதியில் இயங்கும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் வாயிலாக நோட்டீஸ் அனுப்பப்படவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்