என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vinayagar Chadurthi"
- விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
- அந்த மோதல் வன்முறையாக வெடித்ததால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.
பெங்களூரு:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் முன்கூட்டியே கரைக்கப்படுகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.
நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது.
இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
விநாயகர் சிலை கரைப்பின் போது ஏற்பட்ட வன்முறையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
- விநாயகர் சிலைகள் அடங்கிய மண்டல்களில் கண்காட்சி வைக்கப்படுவது வழக்கம்.
அகமதாபாத்:
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலைகள் அடங்கிய மண்டல்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு மண்டல் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதில், சமீபத்தில் இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவின் கேட்ச் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது.
இதைக்கண்ட சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
- உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.
- எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.
எல்லா ஜீவராசிகளுக்கும் உதடுகள் வெளியே தெரியும்.
யானைக்கு மட்டும் தான் தும்பிக்கை உதட்டை மூடியிருக்கிறது.
உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.
எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.
மற்ற நேரங்களில் வாயை மூடிக் கொண்டு அமைதி காப்பது தான் உண்மையான ஞானியின் அடையாளமாகும்.
இதைக் காட்டவே வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜமுக ரூபத்தில் விநாயகர் இருக்கிறார்.
எல்லாவிதமான அறிவுக்கும் முடிவு மவுனம்தான். இது விநாயகர் முகம் உணர்த்தும் தத்துவம்
- விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர்.
- விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
* விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
* புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
* பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.
* ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
* விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
* தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
* கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
* சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.
- நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.
- விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு மேல் மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
படமும் வைத்துக்கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும்.
பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.
விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.
விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.
தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை வீட்டில் எத்தனை நாட்கள் வைத்து இருக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார்.
தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப்போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன்.
மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.
இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள்.
அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி.
கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.
ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள்.
அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான்.
அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது.
அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
- பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி விநாயகரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வக்ரதுண்ட மஹாகாய கோடி ஸூர்ய ஸமப்ரப !
அவிக்நம் குரு மே தேவ ஸர் வகார்யேஷு ஸர்வதா!!
உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர் சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரிய பிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும் எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும்.
அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது..
ஓம் கம் கணபதயே நமஹ !
மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை) புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம்பருத்தி, வெண் தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும்.
மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
- வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.
- மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரை வாங்க வேண்டும்.
முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப் புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல் பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனி இலை போட்டு பச்சரிசியை நிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும்.
வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம்.
ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோ கூடாது.
மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.
பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூட வேண்டும்.
அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்தி பூஜிப்பது சிறப்பானது.
- இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.
- இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்க முடியும்.
"ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"
இந்த மந்திரத்தை செபித்து வர காரியத் தடைகள் நீங்கும்.
எல்லா வளமும் நலமும் அமையும்.
குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன் இந்த மந்திரத்தை 3 முறை செபித்து கணபதியை வேண்டி செல்ல காரிய சித்தி கிட்டும்.
கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை செபித்து கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக் கிழமை ஜெபிக்கத் தொடங்கலாம்.
எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.
இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும். உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.
இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும். இது அனுபவ உண்மை.
ஒம் கம் கணபதியே நமஹ
இது கணபதியின் மூல மந்திரம்.
இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.
இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.
இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!
- அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.
- மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள்.
நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டே ஆரம்பிக்கிறோம்.
அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது,
முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம்.
பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ' ஓம் ' என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம்.
அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.
எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான்.
மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை.
மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார்.
பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது.
நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.
விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது.
இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும்.
புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி.
மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள்.
நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.
இவரை நினைத்து அனுசரிக்க வேண்டிய விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம்.
ஆவணி மாத அமாவாசையின் 4-ஆம் நாள், சுக்லபட்ச சதுர்த்தியன்று நம் முதல்வனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.
- அதாவது கணேசருக்கு மேல் உயர்ந்தவர் வேறு ஒருவரும் இல்லை என்பது இதன் பொருள்.
- இவ்வூர் மக்கள் வெளியூரில் இருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் பெயரில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் கணபதி அக்ரஹாரம்.
இந்த கிராம மக்கள் பிள்ளையார் சதுர்த்தி அன்று வீட்டில் பிள்ளையாரை தனியாக வைத்து பூஜை செய்வது இல்லை.
தண்ணீரில் விடுவதும் இல்லை. இந்தப்பழக்கம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
எல்லா நிவேதனப் பொருட்களையும் பிள்ளையார் கோவிலுக்கு, எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள்.
'கணேசாத் அன்யத் நகிங்கன்' என்று சொல்வார்கள்.
அதாவது கணேசருக்கு மேல் உயர்ந்தவர் வேறு ஒருவரும் இல்லை என்பது இதன் பொருள்.
விநாயகர் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால் கோவிலுக்கே சென்று முழு முதல்வனுக்கு முதல் மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்கு விநாயகப்பெருமானின் லீலையே காரணம்.
தஞ்சை அரண்மனையில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரியாக இருந்தார்.
அவர் இங்கிருந்த போது விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் பிள்ளையார் வைத்து பூஜை செய்ய முடிவு செய்து
நிவேதனப்பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வீட்டிற்குள் சென்றார்.
திரும்பி வந்த பார்த்த போது தாம்பாளம் முழுவதும் தேள்கள் இருந்தன.
அவர் பயந்து போய் அக்கம் பக்கத்தில் சொல்ல அவர்கள் இவ்வூர் வழக்கத்தை சொல்லி விளக்கினர்.
பின்னர் அவர் எல்லாப்பொருட்களையும் கோவிலுக்கு எடுத்து சென்று ஒப்படைத்தார்.
இன்னொருவர் வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தொடங்கினார்.
அப்போது திருவிழாவிற்கு வரவழைக்கப்பட்டு இருந்த யானை அவர் வீட்டுக்கு அருகில் வந்ததும், வேகமாக பிளறியது.
பின்னர் வாசல் கதவு, கீற்று இவைகளை பிரித்து எறிந்தது.
பின் சாய்ந்த நிலைக்கு வந்து அங்கிருந்து சென்று விட்டது.
அரண்டு போன அந்த நபர் கோவிலுக்கு வந்து கணபதியை வழிபட்டார்.
ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழாவை அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து
எப்படி ஆனந்தமடைந்தார்களோ அதைப்போல கணபதி அக்ரஹார கிராம மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை
தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து பரவசம் அடைகின்றனர்.
இவ்வூர் மக்கள் வெளியூரில் இருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பிள்ளையாருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும்.
- அரிசியின் மேல் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி ‘உ’ போட வேண்டும்.
ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
இயலாதவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று சதுர்த்தி திதி நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று முறைப்படி
விநாயகரை தரிசித்து விட்டு பிறகு தான் பூஜைக்குரிய களிமண் பிள்ளையாரை வாங்க வேண்டும்.
வீட்டின் பூஜை அறையில் மரப்பலகையில் ஆசனம் போட்டு, அதில் பச்சரிசி மாக்கோலம் போட வேண்டும்.
ஒரு தலை வாழை இலையை அதன் நுனிப்பகுதி கிழக்கு திசையை பார்த்து இருக்குமாறு
அப்பலகையில் மேல் போடப்பட்டுள்ள கோலத்தின் மீது வைக்க வேண்டும்.
அந்த இலையில் மூன்று கைப்பிடி அளவு நல்ல பச்சரிசியை பரப்ப வேண்டும்.
அரிசியின் மேல் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி 'உ' போட வேண்டும்.
அதன்கீழ் ஓம் என்று அதே விரலால் எழுத வேண்டும்.
வாங்கி வந்த மண் பிள்ளையாரை அந்த அரிசியின் மேல் அமர்த்தி வைக்க வேண்டும்.
அதனை அருகம்புல், பூ, எருக்கம்பூ, விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும்.
தொப்புளில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.
விநாயகர் அகவல், விநாயகர் மூல மந்திரம் மற்றும் விநாயகர் தொடர்பான மந்திரங்களை கூறி தூபமிட்டு, சூடமேற்றி விநாயகரை வழிபட வேண்டும்.
பிள்ளையாருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும்.
அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய், எள் உருண்டை முதலியன விநாயகருக்கு விருப்பமான பிரசாதமாகும்.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிறகு களிமண் விநாயகரை குளம், கிணறு, ஆறு, சமுத்திரம் ஆகிய ஏதாவது ஒன்றில் தண்ணீரில் விட வேண்டும்.
உடைக்கவோ அல்லது கரைக்கவோ கூடாது. அப்படியே தண்ணீரில் இறக்கி விட வேண்டும்.
இதற்கு விசர்ஜனம் என்று பெயர்.
ஆண்கள் தான் இதை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி பூஜைநாளையும் சேர்த்து 1,3,5,7 என்று ஒற்றைப்படை நாளில் தான் இப்படி இறக்கி விட வேண்டும்.
அந்த நாளும் ஞாயிற்றுக் கிழமை அல்லது திங்கட்கிழமையாக மட்டுமே இருக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்