என் மலர்
நீங்கள் தேடியது "Viswasam Censor"
சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி வரும் விஸ்வாசம் தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
படத்தின் புரமொஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டி.இமான் இசையில் சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
#Viswasam will be a 'U'niversal Family Entertainer.#ViswasamCensoredU#ViswasamPongal2019
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 24, 2018
மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #Viswasam #AjithKumar #ViswasamCensoredU #ViswasamPongal2019






