search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekananda school"

    • புதுவை கோபாலன்கடை விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கண்காட்சி நடந்தது. முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார்.
    • இதில் பள்ளியின் முதல்வர் சரண்யா , இணை முதல்வர் கீதா, பிரீத்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோபாலன்கடை விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கண்காட்சி நடந்தது. முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி கண்காட்சியை தொடங்கி வை த்து பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் பொம்மை உலகம், விஞ்ஞான அரங்கம் உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு படை ப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் பள்ளியின் முதல்வர் சரண்யா , இணை முதல்வர் கீதா, பிரீத்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம், மாவட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த விவேகானந்தா பள்ளி மாணவிகள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத்,முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

    • மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் இறகுப்பந்து போட்டியில், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி, ஆகியோர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகளை,பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத், முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

    ×