என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vivian Balakrishnan"
- பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.
- இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக விரைவில் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். இந்தியா-சிங்கப்பூா் அமைச்சா்கள் அளவிலான உயர்மட்ட சந்திப்பு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது.
இதில், இந்திய தரப்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வா்த்தகம்-தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ரெயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கொண்ட குழு பங்கேற்றது.
இக்கூட்டம் முடிந்தபிறகு சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் கூறும் போது, `அமைச்சா்களின் கூட்டம் ஆக்கபூா்வமானதாக இருந்தது. மேலும் பிரதமா் மோடியின் சிங்கப்பூா் பயணத்துக்கு களமாகவும் அமைந்தது. பிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூருக்கு வர உள்ளார். அவரது பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.
மேம்பட்ட உற்பத்தி, செமி-கண்டக்டா்கள், விமானப் போக்குவரத்து, கடல்வழி இணைப்பு ஆகிய புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதங்களைத் தொடங்கியுள்ளோம்.
சுமாா் 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடு இப்போது அதன் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய மேம்படுத்தலைத் தொடங்கியுள்ளது. இச்சூழலில் இந்தியாவுடன் நாங்கள் ஒத்துழைப்பில் இருப்பது மிகவும் சிறந்தது' என்றார்.
பிரதமர் மோடி யின் சிங்கப்பூர் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அவரது பயணத்தில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி தமிழரான விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் முக்கிய மந்திரியாக இருக்கிறார்.
தமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன். 57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
2001-ம் ஆண்டு அரசியலில் நுழைந்து 2004-ம் ஆண்டில் இணை மந்திரியானார். தொடர்ந்து சுற்றுச் சூழல் மற்றும் நீர்வளத்துறை மந்திரியாகி 2015-ம் ஆண்டில் வெளிவிவகாரத்துறை மந்திரி ஆனார்.
டிரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தை செலவிட்ட ஒரே சிங்கப்பூர் தலைவர் இவராவார்.
தொடர்ந்து இருநாட்டு தலைவர்களிடமும் மாநாட்டை பற்றி விவரித்துள்ளார். இதனை ஒருங்கிணைத்தற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் தனிப்பட்ட முறையில் பாலகிருஷ்ணனிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதற்கிடையே ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம்மு தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்