search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vote registration"

    • 25 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 454 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • 34 ஆயிரத்து 651 வாக்குவா சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கபட உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் மொத்தம் 25 பாராளுமன்ற தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    பாராளுமன்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனை நிலவுகிறது.

    ஆந்திராவில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இறுதி நாளில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் மற்றும் சித்தூரில் பிரசாரம் செய்தார். கொட்டும் மழையிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், அவர் போட்டியிடும் பிதாபுரம் தொகுதியிலும், காக்கிநாடா தொகுதியிலும் பிரசாரம் செய்தார்.

    பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா திருப்பதியில் பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி,ஒய்.எஸ். சர்மிளாவுடன் இணைந்து கடப்பாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மந்திரி ரோஜா, நகரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

    25 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 454 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 417 ஆண் வேட்பாளர்களும் 37 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் .இதேபோல் 175 சட்டமன்ற தொகுதிக்கு 2,387 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இதில் 2154 ஆண் வேட்பாளர்களும் 231 பெண் வேட்பாளர்களும் உள்ளனர்.

    ஆந்திராவில் உள்ள 26 மாவட்டங்களில் 46 ஆயிரத்து 389 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,438 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    தேர்தல் பணியில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 34 ஆயிரத்து 651 வாக்குவா சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கபட உள்ளது.

    ஆந்திராவில் 4 கோடியே 14, 187 வாக்காளர்கள் உள்ளனர். துணை ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ், பா.ஜ.க., பி.ஆர்.எஸ். கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 475 ஆண் வேட்பாளர்களும் 50 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 35 ஆயிரத்து 88 வாக்குச்சாவடி மையங்கள் தேர்தல் பணியில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணியமத்தப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள 13 தொகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இங்கு மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படுகிறது. தெலுங்கானாவில் 3 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள மது கடைகள் மதுபான கூடங்கள் நேற்று முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நாளை வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன

    இதேபோல் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.
    • தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செந்தில்குமார், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் தயா இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.பி ரமேஷ், விழுப்புரம் நகரதலைவர் செல்வராஜ், விழுப்புரம் மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் வண்டிமேடு ராஜ்குமார், தே.மு.தி.க. நகரத் தலைவர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ஐ மாவட்ட நிர்வாகி, தனி தாசில்தார் (தேர்தல்) கோவர்தனன், தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    ×