search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting booths"

    திருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1670 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலை முன்னிட்டு நகரில் 18 இடங்களிலும், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 27 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகளுடன் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நகரில் உள்ள 47 வாக்குச்சாவடிகளும், தொகுதியில் உள்ள 134 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக மத்திய-மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 3600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை குறிப்பதால் ‘போலீசார் கை காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது’ என பெங்களூரு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். #Police #HandStopSign #VotingBooths
    பெங்களூரு:

    பெங்களூரு நகரில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணி குறித்து போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தேர்தலையொட்டி போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தயாரித்துள்ளது. இந்த புத்தகத்தின் நகல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் வழியாக போலீஸ்காரர்களின் செல்போன்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் சின்னமாக ‘கை’ உள்ளது. வாக்குச்சாவடியின் அருகே கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறை உள்ளது. பொதுவாக போலீசார் உள்ளங்கையை காட்டி வாகனங்களை நிறுத்துவது வழக்கமாக உள்ளது.

    இவ்வாறு உள்ளங்கையை காட்டி வாகனங்கள் நிறுத்தும்போது அது காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னத்தை குறிப்பதாக இருக்கிறது. இதனால், போலீசார் தேர்தல் பணியின்போது காங்கிரஸ் கட்சியின் சின்னத்தின் வடிவில் தங்களின் கையை காண்பிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    போலீசாருக்கு நூதன அறிவுரை வழங்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. #VotersList
    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23-ந்தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடத்தப்பட உள்ளன. சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


    4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும் மற்ற நாட்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதுவரை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    "நே‌ஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்" வழியாகவும் tn.election.gov.in  என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் தலைமை அலுவலகராகவும் அவருக்கு கீழ் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஊழியர் வீதம் செயல்படுவார்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    2 மாத பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம் நடந்து முடிந்த பிறகு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி முதல் வாரம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.  #VotersList
    ×