search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Warm up match"

    ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். #AUSvIND #ViratKohli
    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

    அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.

    அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.

    கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.

    புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி), விராட்கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடியும் சிறப்பாக ஆடியது.

    ரகானே 56 ரன் எடுத்து ரிட்டயர்ட் அவுட்டானர். விகாரி 53 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 92 ஓவரில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சை விளையாடியது. #AUSvIND #ViratKohli
    எசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தவான் டக், புஜாரா 1 ரன்னிலும் வெளியேறினார்கள். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் சசக்ஸ் அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது.

    இந்த ஆட்டம் இன்று செல்ம்ஸ்போர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முரளி விஜய், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை எம் கோல்ஸ் வீசினார். இந்த ஒவரின் 3-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் தவான் ஆட்டம் இழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவர் ஆட்டத்தின் 3-வது ஓவரின் 4-வது பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.



    3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 6 ரன்னுடனும், ரகானே 5 ரன்னுடனும் விளையாடி வருகிறார்கள்.
    இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பீபா கால்பந்து பயிற்சி ஆட்டம் காஸா வன்முறையில் 123 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence

    ஜெருசலேம்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. அந்த வகையில் வருகிற 9-ம் தேதி இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ஜெருசலேம் நகரில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதற்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அப்படி அர்ஜெண்டினா அணி ஜெருசலேம் நகரில் கால்பந்து விளையாடினால் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் ஜெர்சி மற்றும் படத்திற்கு தீவைக்குமாறு பாலஸ்தீன அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

    இதையடுத்து, இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்வதாக அர்ஜெண்டினா அறிவித்துள்ளது.  இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 123 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
    ×