search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water level increase"

    • முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து ள்ளது. நேற்று முன்தினம் 129.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 129.50 அடியாக உயர்ந்தது. இன்று காலை 130.85 அடியாக அதிகரி த்துள்ளது.

    நேற்று 2738 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5258 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4896 மி.கனஅடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.20 அடியாக உள்ளது. வரத்து 1579 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 2915 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் போடியின் முக்கிய நீர்ஆதா ரமான கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே போடி அருகில் உள்ள அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுப்பணி த்துறையி னர் சார்பில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை இங்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்த ப்பட்டுள்ளது. வெள்ள ப்பெருக்கால் ராஜவா ய்க்கால் மூலம் போடியில் உள்ள குளங்களுக்கு செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு தற்போது பெய்து வரும் மழையினால் போடி பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    பெரியாறு 67, தேக்கடி 31, கூடலூர் 5.7, உத்தமபாளையம் 4.4, வீரபாண்டி 2.4, போடி 5.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக்கொண்டு 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது.
    • கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையிலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக்கொண்டு 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 1-ந்தேதி பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    ஆரம்பத்தில் 200 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 400 கனஅடியாக பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டது. தற்போது முல்லைபெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 500 கனஅடியும், தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கனஅடியும் என 600 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 130.15 அடியாக உள்ளது. வரத்து 342 கனஅடி, நீர் இருப்பு 4732 மி.கனஅடி. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 55.61 அடியாக உள்ளது. வரத்து 232 கனஅடி, திறப்பு 869 கனஅடி, நீர் இருப்பு 2818 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.60 அடி, வரத்து 74 கனஅடி, இருப்பு 280.69 மி.கனஅடி.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 84.62அடி, வரத்து 15 கனஅடி, திறப்பு 6 கனஅடி, இருப்பு 435.58 மி.கனஅடி.

    பெரியாறு 7.2, தேக்கடி 6.4, உத்தமபாளையம் 0.8, ஆண்டிபட்டி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியுள்ளது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கி உள்ளது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு 127 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 132 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3474 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    கோப்புப்படம்

    இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து தற்போது 59.58 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.50 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1, தேக்கடி 7, வைகை அணை 3.6, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை முதலே தேனி மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் மழைப்பொழிவு அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MullaPeriyar #PeriyarDam
    ×