search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water supply project"

    விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதிகள் பயனடையும் வகையிலான புதிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி கூட்டரங்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 30 பேருக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியமாக மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை கலெக்டர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளில் ரூ.404 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து பணிகள் தொடங்க அறிவிக்கப்பட உள்ளது.

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தில் மாவட்டத்தில் 4,210 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.126 கோடியே 30 லட்சம் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 30 பேருக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், உதவி நிர்வாக பொறியாளர் சுப்பாராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×