search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "whale hunting"

    ஜப்பானில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. #whalehunting #Japan
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கடலோரப் பகுதி மக்கள் திமிங்கலங்களை இறைச்சிக்காக வேட்டையாடி வந்தனர். திமிங்கல இறைச்சியை அவர்கள் விருப்பமுடன் சமைத்து சாப்பிட்டனர்.

    இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அங்குள்ள மக்கள் மத்தியில் திமிங்கல இறைச்சி மீதான விருப்பம் அதிகரித்தது. ஆனால் சமீப காலமாக திமிங்கல இறைச்சியை சாப்பிடுவது அங்கு குறைந்தது.

    பல்லாண்டு காலமாக ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபட்டிருந்தபோதுகூட ஆராய்ச்சிக்காகத்தான், அவை வேட்டையாடப்படுவதாக கூறியது. ஆனால் திமிங்கல இறைச்சி விற்பனையில் ஈடுபட்டது. இது சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜப்பானில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.

    இதற்காக ஐ.டபிள்யு.சி. என்று அழைக்கப்படுகிற சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து ஜப்பான் விலகுகிறது.

    இந்த அமைப்பு, திமிங்கல வேட்டைக்கு 1986-ம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது.



    1951-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் ஜப்பான் உறுப்பினராக இருந்து வருவதால் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை கூடாது என்ற விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை இருந்தது.

    இப்போது வணிக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு ஜப்பான் அனுமதி அளிக்கிற காரணத்தால், சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து விலகி விட உள்ளது.

    திமிங்கல இறைச்சி சாப்பிடுவது ஜப்பான் கலாசாரம்தான் என்று ஜப்பான் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதே நேரத்தில் வணிக ரீதியில் திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளித்தால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என பாதுகாப்பு குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

    திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளித்து இருப்பது குறித்து ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் யோஷிஹிடே சுகா கூறுகையில், “ஜப்பான் நீர்ப்பரப்பில், பொருளாதார மண்டலத்தில் மட்டும் திமிங்கல வேட்டைக்கு அனுமதி தரப்படுகிறது” என கூறினார்.

    இதன் காரணமாக அண்டார்டிகா நீர்ப்பரப்பிலும், தென் துருவப்பகுதியிலும் திமிங்கல வேட்டை நிறுத்தப்பட்டு விடும்.

    ஆனால் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டையை அனுமதிக்கும் ஜப்பானின் முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மாரிசே பேனி மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மெலிசா பிரைஸ் கூட்டாக விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “ஜப்பானின் முடிவு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. வணிக ரீதியிலான மற்றும் ஆராய்ச்சி ரீதியிலான திமிங்கல வேட்டையை நாங்கள் எதிர்க்கிறோம்” என கூறி உள்ளனர்.#whalehunting #Japan
    ஜப்பானில் வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை மீண்டும் வரும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #JapanWhaleHunting
    டோக்கியோ:

    ஜப்பானில் திமிங்கல இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கல இறைச்சியை விரும்பி சாப்பிட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அதன் நுகர்வு அதிகரித்தது. தற்போது திமிங்கல இறைச்சி சாப்பிடுவது குறைந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இறைச்சிக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுகின்றன.

    அதேசமயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் அரசு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு திமிங்கலங்களை வேட்டையாடியது. பின்னர் அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமிங்கல வேட்டையில் ஈடுபடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த ஒரு வருடம் மட்டும் வேட்டையை நிறுத்திய ஜப்பான், அடுத்த ஆண்டில் இருந்து வேட்டையை மீண்டும் தொடங்கியது.



    இந்நிலையில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து வர்த்தக அடிப்படையில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

    வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டைக்கு சர்வதேச திமிங்கல வேட்டை தடுப்பு ஆணையம் (ஐடபுள்யூசி) தடை விதித்துள்ளது. எனவே, அந்த ஆணையத்தில் இருந்து விலகி விட்டு, திமிங்கல வேட்டையைத் தொடங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. திமிங்கல இறைச்சி சாப்பிடுவது தங்கள் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஜப்பானின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால் ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று  என்று ஐடபுள்யூசி எச்சரித்துள்ளது. அதாவது, ஐடபுள்யூசியால் பாதுகாக்கப்படும் மின்கே போன்ற அழிந்துவரும் திமிங்கல இனங்களை ஜப்பான் இனி தாராளமாக வேட்டையாடும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஜப்பான் பிராந்திய நீர்ப்பரப்பு மற்றும் பொருளாதார மண்டலங்களில் வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை கட்டுப்படுத்தப்படும் என்று அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எனவே, அண்டார்டிக் கடல் மற்றும் தென்துருவத்தில் திமிங்கல வேட்டையை ஜப்பான் நிறுத்தும். எனினும் ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JapanWhaleHunting
    ×