search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife paramour arrested"

    வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கணவனை கொன்று காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டார். கூட்டாளிகளும் சிக்கினர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த பலவன்சாத்துகுப்பம் பாரதியார்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்யுவராஜ் (வயது 28). தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி கோமதி (23) அதேபகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கட்யுவராஜ், அதன்பின்னர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து கோமதி, பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதி மற்றும் வெங்கட்யுவராஜின் நண்பர்கள், அவர் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், 15 மாதங்களுக்கு பின்னர் வேலப்பாடியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கட்யுவராஜை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் மோர்தானா அணை பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்த வெங்கட்யுவராஜின் எலும்புகூடுகளை கைப்பற்றினர்.

    விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக வெங்கட்யுவராஜை கொலைசெய்தது தெரியவந்தது.

    ராஜ்குமார், ஆரணியை சேர்ந்த அவரது நண்பர்களான செந்தில் (33), வேலு (32), கோட்டீஸ்வரன் (38), விஜய் (23), கோமதி ஆகியோர் கைது செய்யபட்டனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கோமதி வேலூரில் உள்ள மெடிக்கல், பியூட்டிபார்லர் ஆகியவற்றில் வேலை பார்த்தவர். அப்போது ராஜ்குமாருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டது.

    கணவன் இல்லாத நேரத்தில் கோமதி வீட்டுக்கு சென்று ராஜ்குமார் சந்தித்தார். இது வெளியே தெரிந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வெங்கட்யுவராஜ் கோமதியை வேலைக்கு அனுப்பவில்லை. மேலும் போன்பேசுவதை நிறுத்த செய்தார்.

    கள்ளக்காதலனை சந்திக்க முடியாததால் கோமதி ஆத்திரமடைந்தார். ராஜ்குமாரை தொடர்பு கொண்டு கணவனை கொலை செய்ய கூறியுள்ளார்.

    அவரது நண்பர் செந்தில், ராஜ்குமார் இருவரும் வெங்கட்யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அவருக்கு இருக்கும் மது பழக்கத்தை பயன்படுத்தி கொண்டனர்.

    கொலை செய்வதற்கு 2 மாதத்துக்கு முன்பாக வேலூரில் உள்ள மதுபாரில் வெங்கட்யுவராஜ் மது குடித்தார். அவரை தேடி சென்று செந்தில் பேச்சு கொடுத்தார். தான் ராணுவத்தில் வேலை செய்கிறேன்.

    அடிக்கடி மது கிடைக்கும் எனக்கூறி மது வாங்கி கொடுத்தார். அவரை அடிக்கடி அழைத்து மது வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.

    செந்திலின் நட்பை உண்மையென நம்பிய வெங்கட்யுவராஜ் அவருடன் நீண்ட நேரம் பொழுதை கழித்தார். மாலை நேரம் வந்ததும் கணவனிடம் செல்லமாக பேசி கோமதி மது குடிக்க அனுப்பி வைத்துள்ளார்.

    அவர் சென்றதும் ராஜ்குமாரை வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் தனிமையில் ஜாலியாக இருந்தனர். 2 மாதங்கள் இது நீடித்தது.

    வெங்கட்யுவராஜிக்கு மது வாங்கி கொடுக்க பணம் அதிக செலவானது. இதனால் திட்டமிட்ட படி அவரை கொலை செய்ய செந்தில் அவரது கூட்டாளிகளுடன் ஒகேனக்கல் அழைத்து சென்றனர். அங்குள்ள காட்டுபகுதியில் மது குடித்தனர்.

    அப்போது வெங்கட் யுவராஜின் போனில் அவரது நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் ஒகேனக்கல்லில் செந்திலுடன் இருப்பதை கூறிவிட்டார். இதனால் அங்கு வைத்து கொலை செய்யும் முடிவை கைவிட்டனர்.

    பின்னர் மோர்தானா அணை அருகே காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அதிக மது ஊற்றி கொடுத்து வெங்கட்யுவராஜை டவலால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு உடலை போட்டு சென்றுள்ளனர்.

    போலீசார் உடலை தேடி சென்றபோது எலும்பு கூடாகவே கிடந்தது. மேலும் வெங்கட்யுவராஜ் பேண்ட் கைபற்றினர் அவர்கள் குடித்த போது விட்டு சென்ற மதுவுடன் இருந்த பாட்டிலும் அப்படியே கிடந்தது அதையும் போலீசார் மீட்டனர்.

    கணவனை கொலை செய்துவிட்டு அவர் மாயமானதாக கோமதி நாடக மாடியுள்ளார்.

    கள்ளதொடர்பையும் தொடர்ந்தார் 15 மாதங்களுக்கு பிறகு கொலையில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    ×