என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » wimbledon2018
நீங்கள் தேடியது "Wimbledon2018"
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் மகளிர் இரட்டையருக்கான இறுதிப் போட்டியில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது #Wimbledon2018 #DoublesFinal
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி அமெரிக்காவின் நிகோல் மெலிசர் -செக் குடியரசின் க்வேடா பெஸ்ச்கேவுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 4-6 என ரெஜிகோவா - சினியகோவா ஜோடி இழந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த ஜோடி இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி 6-0 என்ற நேர் செட்டில் வென்றது.
இறுதியில், 4-6, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் நிகோல் மெலிசர் - க்வேடா பெஸ்ச்கேவை வென்று ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #Wimbledon2018 #SerenaWilliams #AngelliqueKerber
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில் 11-ம் நிலை வீரரான ஜெர்மனியின் கெர்பர் 25-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செரினா வில்லியம்சை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே கெர்பர் சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டிலும் கெர்பர் அதிரடியாக ஆடினார். செரினா வில்லியம்சால் அவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனல கெர்பர் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இறுதியில், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். #Wimbledon2018 #JohnIsner #KevinAnderson
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதலாவது அரையிறுதியில் 8-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார்.
ஆண்டர்சன் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 6-7, 6-7 என ஜான் இஸ்னர் கைப்பற்றினார்.
இறுதியில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் ஆண்டர்சன் சிறப்பாக ஆடினார். அதனால் நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது சுற்று அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஆண்டர்சனும், இஸ்னரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்ட நேரம் கூடிக் கொண்டே போனது.
கடைசியாக, ஆண்டர்சன் 26-24 என்ற கணக்கில் இஸ்னரை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
இறுதியில், ஆண்டர்சன் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24 என்ற செட்களில் இஸ்னரை வென்றார். இந்த அரையிறுதி போட்டி சுமார் ஆறரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இரண்டாவது காலிறுதியில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 8ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.
பெடரர் முதல் செட்டை 5-2, இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டர்சன் 5-7, 4-6 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் தீவிரமாக போராடினர். இறுதியில், ஆண்டர்சன் 11-13 என் அந்த செட்டை கைப்பற்றி அசத்தினார்.
ஆட்டத்தின் முடிவில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் பெடரர் போராடி தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X