என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » winter cough
நீங்கள் தேடியது "Winter Cough"
குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அத்தகைய உணவுகள் உடலை மேலும் பலவீனப்படுத்தும். உடல் உபாதைகள் ஏற்படவும் வழி வகுத்துவிடும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்துவிடும்.
தொண்டை எரிச்சல் பிரச்சினையும் அதிகமாகிவிடும். தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும். குளிர் பானங்கள் பருகுவதும் தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும்.
வறுத்த உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும். காபின் கலந்த பானங்கள், மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த திராட்சை பழம், மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, அன்னாசிபழம், கொய்யா போன்றவற்றையும், வைட்டமின் இ சத்துக்களை கொண்ட கீரை வகைகள், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி, நெல்லிக்காய், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
அதுபோல் செலினியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. அந்த சத்து நிறைந்த இறால், முட்டை, இறைச்சி வகைகளை சாப்பிடலாம். சிக்கன் சூப் பருகுவதும் சளிக்கு இதமாக இருக்கும். கிரீன் டீ பருகுவதும் சளித்தொல்லைக்கு நிவாரணம் தரும். அதில் சளி பிரச்சினைக்கு காரணமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியமானது.

×

X