search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women premier league"

    • ஷோபி டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.
    • எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார்.

    பெண்கள் பிரீமியர் லீக் 2024 சீசனின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 113 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மான அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கன மெக் லேனிங் 23 பந்தில் 23 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது. அதன்பின் 52 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் சோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஷ்ரேயாங்கா பாட்டில் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா- ஷோபி டிவைன் ஆகியோர் நிதானமாக விளையாடினர். குறைந்த இலக்கு என்பதால் ஆட்டத்தில் வேகம் காட்டவில்லை.

    அணியின் ஸ்கோர் 8.1 ஓவரில் 49 ரன்களாக இருக்கும்போது டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் எலிஸ் பெர்ரி களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் மந்தனா அதிரடி ஆட்டத்தை தொடங்க நினைக்கும்போது 39 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அப்போது ஆர்சிபி 15 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது, எலிஸ் பெர்ரி உடன் ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர்.

    ஆர்சிபி வீராங்கனைகள் வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். ஆர்சிபி அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் கிடைத்தது. 3-வது பந்தை ரிச்சா கோஷ் பவுண்டரிக்கு விரட்ட ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார். ரிச்சா கோஷ் 14 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கடந்த ஆண்டுதான் பெண்கள் பிரீமியர் லீக் தொடங்கியது. 2-வது சீசனான இதில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.
    • மும்பை அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்தில் 33 ரன்களும், அமெலியா கெர் 25 பந்தில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆர்சிபி வீராங்கனைகள் விரைவாக ரன்கள் சேர்க்க திணறினர். தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (10), சோபி டிவைன் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த எலிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டத்தால் ஆர்சிபி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    எலிஸ் பெர்ரி

    பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணி வீராங்கனைகளும் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர். தொடக்க வீராங்கனை யாஸ்திகா பாட்டியா 27 பந்தில் 19 ரன்களும், ஹெய்லே மேத்யூஸ் 14 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்தில் 33 ரன்களும், அமெலியா கெர் 25 பந்தில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியால் 6 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்சிபி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

    • தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடியுள்ளார் இஸ்மாயில்.
    • இதற்கு முன்னதாக 129 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2-வது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.

    இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது.

    இதற்கு முன்னதாக 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.

    நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 163 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    • ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 80 ரன்கள் விளாசினார்.
    • அலிசா ஹீல் 38 பந்தில் 55 ரன்கள் விளாசிய போதிலும் உ.பி. வாரியர்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

    5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 80 ரன்கள் (50 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். எலிஸ் பெர்ரியும் அரைசதம் (58 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார்.

    அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலி களத்தில் நின்றது வரை அவர்களுக்கு நம்பிக்கை காணப்பட்டது. ஹீலி 55 ரன்னில் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு (8 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (5 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

    ஸ்மிரிதி மந்தனா

    20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 175 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 5-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி. வாரியர்ஸ் அணியின் 3-வது தோல்வி இதுவாகும்.

    இத்துடன் பெங்களூரு சுற்று நிறைவடைந்தது. அடுத்தகட்ட போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஏற்கனவே தொடக்க லீக்கில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு டெல்லி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    • நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியானது.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் மகளிர் கிரிக்கெட் லீக் தொடரில் பாலிவுட் திரை நட்சித்திரம் ஷாருக் கான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

    நாளை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள எம்.ஏ. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

     


    ஷாருக் கான் மட்டுமின்றி ஷாஹித் கபூர், கார்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்களும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் தொடர் நாளை துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
    • புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்த நிலையில், இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கின்றன.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.

    இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அலிசா ஹீலே தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    ×