search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Asia Cup Final"

    • அதிரடியாக விளையாடிய மந்தனா 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா ஆகியோர் களமிறங்கினர். மந்தமாக விளையாடிய ஷபாலி வர்மா 19 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா செத்ரி 9, கவூர் 11 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்தினார். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் பூஜா அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது.
    • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன.

    இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே இறுதி சுற்றில் 5 முறை இந்தியாவிடம் உதை வாங்கியுள்ள இலங்கை அணி அதற்கு பழிதீர்த்து முதல்முறையாக பட்டம் வெல்வதற்கு தீவிரம் காட்டுகிறது.

    எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

    ×