search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's T20 World Cup Series 2024"

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

    சார்ஜா:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடைசி வரை போராடிய கேப்டன் கவுரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக வெற்றி பெற்று அசத்தி உள்ளது. மேலும், ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்காளதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐ.சி.சி விரும்பவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.

    இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டது. ஆனால், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.

    மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது.

    இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ×