என் மலர்
நீங்கள் தேடியது "Women's Tennis Championship"
- 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
- இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ரியாத்:
ஆண்டுதோறும் முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். 'ஸ்டெபிகிராப்' பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் கோகோ காப், ஜெசிகா பெகுலா (இருவரும் அமெரிக்கா), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) ஆகியோரும், 'செரீனா' பிரிவில் விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து), அமன்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் (இருவரும் அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.137 கோடியாகும். போட்டி கட்டணம், லீக் சுற்றுக்குரிய பரிசு என ஒரு வீராங்கனை தோல்வியே சந்திக்காமல் வாகை சூடினால் ரூ.46½ கோடியை பரிசாக அள்ளுவார். முதல் நாளில் ஸ்வியாடெக்- மேடிசன் கீஸ், அனிசிமோவா- ரைபகினா சந்திக்கிறார்கள்.
- ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- ரவுண்ட் ராபின் லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
டெக்சாஸ்:
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'நான்சி ரிச்சே' பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் சபலென்காவை (பெலாரஸ்) தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.
- ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கோகோ காப்- இகா ஸ்வியாடெக் மோதினர்.
- இதில் வெற்றி பெற்ற கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
ரியாத்:
உலகின் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆரஞ்சு பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்க 'இளம் புயல்' கோகோ காப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீராங்கனையான நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்கை (போலந்து) தோற்கடித்தார். 2-வது வெற்றியை சுவைத்த கோகோ காப் அரைஇறுதியை எட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வெளியேற்றி, அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்தார்.
உலக தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) சேர்க்கப்பட்டுள்ளார். #SimonaHalep






