search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker muder"

    தேன்கனிக்கோட்டை அருகே தையல் தொழிலாளி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவரபெட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் சசிக்குமார் (வயது 23).

    இவர் தளியில் மைசூரு சாலையில் தையல் கடை நடத்தி வந்தார்.

    கடந்த 31-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தந்தை ராஜப்பா நேற்று முன்தினம் தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தளி அருகே மதகொண்டபள்ளி- பின்னமங்கலம் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள முட்புதரில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தளி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து தளி போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரித்ததில் இறந்தவர் மாயமான தையல் தொழிலாளி சசிக்குமார் என்பது தெரியவந்தது.

    அவரை சிலர் இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.

    அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சசிக்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அருகில் ஏரியில் கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் வசிக்கும் மல்லேஷ் குடும்பத்தினருக்கும், சசிக்குமார் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மல்லேஷூம் அவரது நண்பர்களும் சேர்ந்துதான் சசிக்குமாரை கடத்தி கொடூர கொலை செய்தது தெரியவந்தது.

    உடனே மல்லேஷை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அவர் தளி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதுக்கி இருந்தது போலீசார் தெரியவந்தது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று மல்லேஷையும், அவரது நண்பர் சசிக்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் தையல் தொழிலாளி சசிக்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    கைதான மல்லேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

    எங்களது குடும்பத்திற்கும், தையல் தொழிலாளி சசிக்குமார் குடும்பத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. சசிக்குமாரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன்.

    மேலும் எங்களது பகுதியில் நான் காதலிக்கும் பெண்ணை சகிக்குமார் காதலிப்பதாக தெரியவந்தது. அவர் மீது மேலும் கொலை வெறி அதிகரித்தது.

    கடந்த 31-ந் தேதி ஆனேக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தையல் தொழிலாளி சசிக்குமார் சென்றதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்தார் அப்போது அவரை நானும், எனது நண்பர் மற்றொரு சசிக்குமார் என்பவரும் சேர்ந்து கொண்டு பின்னமங்கலம் பகுதியில் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினோம். பின்னர் அவரை அரிவாளல் கழுத்து பகுதியில் வெட்டினேன்.

    அவர் இறந்ததை அறிந்த நாங்கள் உடலை பின்னமங்கலம் ஏரிகரை பகுதியில் உள்ள முட்புதரில் உடலை வீசிவிட்டு அவர் வந்த மோட்டார் சைக்கிளை ஏரியில வீசிவிட்டு சென்றோம். நாங்கள் தளி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதுக்கி இருந்தபோது எங்களை போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சங்கரப்பா, முரளி ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். #tamilnews
    ×