search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers died"

    வங்காளதேசம் நாட்டின் கம்மிலா மாவட்டத்தில் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து செங்கல் சூளை தொழிலாளிகள் குடியிருப்பில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். #13killed #truckoverturns
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டில் உள்ள கம்மிலா மாவட்டத்துக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தின் வழியாக நிலக்கரி ஏற்றிகொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

    சாலையில் உள்ள ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. கவிழ்ந்தவாறு புரண்டுச் சென்று அருகாமையில் உள்ள ஒரு தற்காலிக குடியிருப்பில் மோதியது.

    அந்த தற்காலிக குடியிருப்பில் சுமார் 15 செங்கல் சூளை தொழிலாளிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். லாரி மோதியதில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #13killed  #truckoverturns 
    சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #ChinaCoalMine #CoalMineCollapse
    பீஜிங்:

    சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


    இந்த விபத்தில் 21 பேர் பலியாகினர். 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    சீனாவில் செயல்படும் நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #ChinaCoalMine #CoalMineCollapse
    ×