என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "world cup hockey"
- இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது.
- இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.
புவனேஸ்வர்:
15-வது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்றது. தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகள் நேருக்குநேர் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெல்ஜியம் முதல் 2 கோல்களை அடித்தது. ஜெர்மனி ஒரு கோலை அடிக்க 1-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஜெர்மனி மீண்டும் ஒரு கோல் அடிக்க 2-2 என்ற சம நிலை வகித்தன. இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மன் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
- 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.
- இதில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
ரூர்கேலா:
16 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ரூர்கேலாவில் நேற்று நடந்த 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இந்திய அணியில் அபிஷேக் 5-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 12-வது நிமிடத்திலும், ஷாம்ஷெர் சிங் 45-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 49-வது நிமிடத்திலும், சுக்ஜீத் சிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மிம்வி சாம்கிலோ 49-வது நிமிடத்திலும், முஸ்தபா காசிம் 60-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அர்ஜென்டினாவுடன் இணைந்து 9-வது இடத்தைப் பெற்றது.
14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தைப்பிடிக்கும் அணிகள் ‘கிராஸ் ஓவர்’ என அழைக்கப்படும் 2-வது சுற்றுக்கு நுழையும். கடைசி இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும்.
9-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிந்தது. அதன்படி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, ஆகிய 4 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.
கிராஸ் ஓவர் ஆட்டம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடந்தது. இதன் முடிவில் நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதியில் நுழைந்தன. 4 முறை சாம்பியனான பாகிஸ்தான், கனடா, சீனா, நியூசிலாந்து அணிகள் வெறியேற்றப்பட்டன.
கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் மோது கின்றன.
இந்திய அணி கால் இறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை (13-ந்தேதி) எதிர்கொள்கிறது.
1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும், 5-1 என்ற கணக்கில் கனடாவையும் வீழ்த்தியது. 2-2 என்ற கணக்கில் பெல்ஜியத்துடன் ‘டிரா’ செய்தது.
3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தது. 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும், 7-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது. கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
இந்திய அணிக்கு நெதர்லாந்தை வீழ்த்துவது கடும் சவாலாகவே இருக்கும். #HockeyWorldCup2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்