என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Para Athletics"
- 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்தது.
- இந்த தடகள போட்டியில் இந்தியா அதிக பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தது.
கோபே:
மாற்றுத் திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்றது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கம் வென்றார்.
இறுதி நாளான இன்று இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றது. இத்துடன் இந்தியா 6 தங்கம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 17 பதக்கங்கள் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) வென்று பதக்கப்பட்டியலில் 6-வது இடம் பிடித்துள்ளது.
உலக பாரா தடகள போட்டி ஒன்றில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். இதற்குமுன் கடந்த ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் 10 பதக்கங்கள் (3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அதனை முந்தி புதிய வரலாறு படைத்துள்ளது.
சீனா 33 தங்கம் உள்பட 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. பிரேசில், உஸ்பெகிஸ்தான், கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- சச்சின் 16.30 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார்.
- மேலும், ஏற்கனவே அவர் படைத்திருந்த ஆசிய சாதனையை முறியடித்துள்ளார்.
ஜப்பானில் பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46 பிரிவு) போட்டியில் இந்திய வீரர் சச்சின சர்ஜிராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தினார். அவர் 16.30 மீட்டர் தூரத்திற்கு எறிந்தார். இது ஆசிய சாதனையாகும். இதற்கு முன்னதாக 16.21 மீட்டர் தூரம் வீசி ஆசிய சாதனையை இவர்தான் படைத்திருந்தார். தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
இதன்மூலம் இந்தியா 11 பதக்கங்கள் பெறுள்ளது. இதில் ஐந்து தங்கப் பதக்கங்கள் அடங்கும். கடந்த முறை 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருந்தது. தற்போது இந்தியா அதைவிட அதிக பதக்கம் வென்றுள்ளது.
#Watch | Gold in men's shot put !?India's Sachin Sarjerao Khilari wins gold in men's shot put F46 at the ongoing #WorldAthletics championship at Kobe, #Japan pic.twitter.com/EpFJhpydGt
— DD News (@DDNewslive) May 22, 2024
F46 பிரிவு என்பது ஒன்று அல்லது இரண்டு கைகளும் செயல்படாமல் அல்லது மூட்டுக்கு கீழ் இல்லாமல் இருக்க வேண்டும். இதில் கலந்த கொள்ளும் வீரர்கள் இடுப்பு மற்றும் கால்கள் ஆகியவற்றின் ஆற்றலை கொண்டு குண்டு எறிவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்