search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "X Phone"

    • ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவை அறிமுகம்.
    • ஆப்பிள் நிறுவன அறிவிப்பை எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது.

    இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப்பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற எக்ஸ் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். எக்ஸ் பயனர் ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "எக்ஸ் தளத்திற்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட செயலிகள், ஓபன் சோர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஸ்டார்லின்க் இண்டகிரேஷன் வசதி கொண்ட எக்ஸ் போனை சாம்சங் மூலம் உற்பத்தி செய்வீர்களா" என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது," என பதில் அளித்துள்ளார். எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் எக்ஸ் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×