என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youth protest"
- குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.
- மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்பாண்டியன் (36). இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய வீடு கட்டித் தருமாறு சதீஸ்பாண்டியன் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. மேலும் குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஸ்பாண்டியன் இன்று காலை மங்கம்மாள் சாலை பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறினார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். ஆனால் தனது வீடு சேதம் அடைந்து விட்டது. அதற்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று கோஷமிட்டபடி உச்சி பகுதிக்கு ஏறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் போலீசார் மைக் மூலம் அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதனை அவர் கேட்கவில்லை. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர் கீழே வர சம்மதித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சதீஸ்குமார் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழகம், ஆந்திரா, பீகார், உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார், உ.பி ஆகிய மாவட்டங்களில் ரெயில்கள் எரிக்கப்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராணுவத்தில் சேருவதற்காக விண்ணப்பித்திருக்கும் ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்