search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youths of northern"

    • 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுதீர், திலீப் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
    • சுதீர், திலீப் ஆகிய இருவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கூகுள் பே மூலம் பெற்ற ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்களுக்கு அனுப்பினர்.

    ஈரோடு,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதீர்(29), திலீப்(32) ஆகியோர், ஈரோடு வீரப்பன் சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 14-ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுதீர், திலீப் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.5,200 ரொக்கத்தை பறித்துக்கொண்டு இந்த பணம் போதாது என கூறி அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புமாறு ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, சுதீர், திலீப் ஆகிய இருவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கூகுள் பே மூலம் பெற்ற ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்களுக்கு அனுப்பினர். இதையடுத்து அந்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து சுதீர், திலீப் இருவரும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஈரோடு பெரியவலசு, ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்த கார்த்திக்(34), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காட்டுவலசை சேர்ந்த பூபதி(21), பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின்குமார்(22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஈரோடு பகுதியை சேர்ந்த லிங்கேஷ்(47), பிரவீன்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 

    ×