search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zonal president"

    • தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்குட்பட்ட வேலன் நகர், தீபா நகர், திருகுமரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.84.90 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.விழாவில் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாதன் கலந்துகொண்டு புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டில் உள்ள விக்னேஷ்வராநகர் மெயின் வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ், ரூ.14.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன், உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அன்பு பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், செல்வராஜ், பாஸ்கர், மேனன், குமார், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம் மண்டல தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • தெரு விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம் மண்டல தலைவர் இல.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறி பேசினார்கள். அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை, குப்பை எடுத்து செல்வதற்கு போதிய வாகனங்கள் தேவை, பாதாள சாக்கடைக்காக தோண்ட ப்பட்ட ரோடுகளை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.

    அதேபோல் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42 வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு சரிவர எரிவது இல்லை அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதேபோல் கோடை காலம் தொடங்கியதால் குடிநீர் பிரச்சினை அபாயம் உள்ளது எனவே மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

    அதேபோல் மாமன்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் குறைகளை கவுன்சிலர்கள் செய்து கொடுக்க முடியாமல் உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பதில் அளித்து மண்டல தலைவர் இல.பத்மநாதன் பேசியதாவது:- நான்காவது மண்டல த்துக்குட்பட்ட வார்டுகளில் தெரு விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எந்தெந்த பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது என தனி அதிகாரிகளை நியமித்து அதனை கணக்கெடுத்து அது சரி செய்யப்படும். அதேபோல் நான்காவது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் ஆகையால் குடிநீர் பிரச்சினைக்கு வாய்ப்பு இருக்காது. கவுன்சிலர்கள் கூறிய பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்புகளை கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×