என் மலர்
நீங்கள் தேடியது "அழகுக்குறிப்பு"
- வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
- தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் பெரிபெரல் வாஸ்குலர் நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், குருதியோட்டத்தை குறைத்து, வறட்சியை உண்டாக்கி, சரும கொலோஜெனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் ஆட்டோனாமிக் (தன்னியக்க) நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைப்பட்டு தோல் வறட்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வறண்ட சருமம் ஏற்பட முக்கிய காரணங்கள்:
கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு, குளிர்காலங்களில் காணப்படும் குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம், புகை, மதுப்பழக்கம், மன அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை. சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:
சருமத்தை தினமும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். செராமைடுகளைக் கொண்ட வாசனை இல்லாத கிரீம் அல்லது களிம்பை பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
குளிக்கும்போது ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தவும். டியோடரண்ட் சோப்புகள் மற்றும் வலுவான பாடி வாஷ்களை தவிர்ப்பது நல்லது. குளித்த பின்னர் தோல் ஈரமாக இருக்கும் போதே மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் அது நன்றாக உறிஞ்சப்பட்டு சருமம் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவினால் போதும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது நல்லது.
- சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
- சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
வெயிலில் அதாவது இயற்கை வெளிச்சத்தில் பல உருவத் தோற்றமுடைய பல வடிவமுள்ள தோல் வெடிப்புகளும் சிகப்பு நிற தடிப்புகளும் உடலில் சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. மேலே சொன்னது போல தோலில் வேனற்கட்டி போன்ற சிறிய சிறிய சிகப்பு புள்ளிகள் சில பேருக்கு உடல் முழுவதும் ஏற்படுவதுண்டு.
சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் தோலில் படுவதாலும் அல்லது வேறு சில செயற்கை ஒளிக்கதிர்கள் தோலில் படுவதாலும் ஏற்படுவதுண்டு. இதனால் நமது உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மாற்றம் ஏற்பட்டு அது இந்த சிகப்பு நிற தடிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.
மொத்தத்தில் வெயில் அதாவது சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். இது உங்களுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் இதைத் தெரிந்தவர்கள் மருந்தைத் தேடிக் கொள்வார்கள். தெரியாதவர்கள் குணமாகும்வரை பல மருந்துகளைத் தேடி ஓடிக்கொண்டிருப்பார்கள்.
பரம்பரையாகக் கூட சிலருக்கு சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. சில மருந்துகள், ரசாயனப் பொருட்கள், சரும வியாதிகள், கிருமி நாசினிகள், வாசனைத் திரவியங்கள் முதலியனவைகளை உபயோகிப்பவர்களுக்குக்கூட சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. இவைகளில் எதனால் உங்களுக்கு வருகிறது என்பதை நீங்கள் உபயோகிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்திப் பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.
சூரிய ஒளி அலர்ஜி சிலருக்கு லேசாக வந்து எந்தவித சிகிச்சையும் தேவைப்படாமல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சூரிய ஒளி அலர்ஜி இருப்பவர்கள் உடலை முடிந்தவரை மூடி மறைக்குமாறு ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் போவதற்கு சுமார் 20 நிமிடங்கள் முன்பே புறஊதாக் கதிர் தடுப்பு கிரீம்களை தடவிக் கொள்ள வேண்டும்.
இயற்கையாகவே நமது உடல் சூரிய ஒளியை நல்ல வகையில் மிக அதிகமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலுக்கு வைட்டமின் 'டி' சத்து போதுமான அளவு கிடைக்க சூரிய ஒளி மிகவும் உபயோகமாக இருக்கிறது.
இதன் மூலம் நமது உடல் எலும்புகள் அனைத்தும் உறுதியாகிறது. உடலுக்கு புதுத்தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
- குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான்.
- ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
குளிர் காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் உறைய வைத்துவிடும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை மாற்றி ஓரிரு நாட்கள் குளியலுக்கு ஓய்வு கொடுத்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி குளிர் காலத்தில் குளியலை தவிர்ப்பது நல்லதல்ல. குளிர் காலத்திலும் ஏன் தவறாமல் குளிக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
உடல் சுகாதாரம்
தனிப்பட்ட முறையில் உடல் சுகாதாரத்தை பேணுவதற்கு தவறாமல் குளிப்பது முக்கியமானது. கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காமல் இருக்கலாம். ஆனாலும் உடல் தொடர்ச்சியாக எண்ணெய்யை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இறந்த சரும செல்களை உடலில் இருந்து அப்புறப்படுத்தும் செயல்முறையும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
வழக்கமாக குளிக்கும் செயல்முறையை தொடர்வது இந்த அசுத்தங்களை நீக்க உதவும். உடல் துர்நாற்றம், சருமத் தொற்றுகள் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும். பொதுவாக குளிர் காலத்தில் சருமம் வறட்சி அடையும், சரும எரிச்சலும் ஏற்படும். குளியல் மூலம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த துணைபுரியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அந்த நீரில் கலந்திருக்கும் மிதமான வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். அது உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு செல்களை துரிதமாக கொண்டு செல்ல உதவிடும்.
சளி, காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை உடல் திறம்பட எதிர்த்து போராடவும் உதவிடும். அத்துடன் சுடு நீர் குளியல் மூக்கடைப்பை தடுக்கவும், நாசி துவாரங்களை திறக்கவும் வழிவகை செய்யும்.
மன ஆரோக்கியம்
குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான். குறைவான சூரிய வெளிச்சம் மற்றும் பருவ கால நோய்த்தொற்றுகள் காரணமாக குளிர் காலம் மன ஆரோக்கியத்துக்கு சவாலாக இருக்கும். இதனை எதிர்த்து போராட சூடான குளியல் பயனுள்ளதாக அமையும்.
இந்த குளியல் உடலை தளர்வடையச் செய்து உடல் ஓய்வுக்கு வித்திடும். மன அழுத்தத்தை குறைத்து நல்ல உணர்வுகளை கொண்ட ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டி மன நிலையை மேம்படுத்தும்.
சரும ஆரோக்கியம்
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை மற்றும் உட்புற வெப்பம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்றி சரும வறட்சி மற்றும் சரும எரிச்சலுக்கு வழிவகுக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் வழக்கத்தை தொடர்வது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது, குளியல் எண்ணெய்களை உபயோகிப்பது போன்றவை சருமத்திற்கு நன்மை பயக்கும்.
சருமத்தை மென்மையாக்கவும் உதவும். லோஷன்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துவதும் குளிர்கால சரும வறட்சியை எதிர்த்து போராட உதவிடும்.
தூக்கம்
வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தசைகளை தளர்த்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கும் வித்திடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் அவசியம்.
குறிப்பாக குளிர்ந்த கால நிலை மற்றும் அழுத்தங்களில் இருந்து உடல் மீள்வதற்கு தூக்கம் அவசியமானது. அதற்கு குளியல் போடுவது முக்கியமானது.
- சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம்.
- இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.
பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பாக சரும அரிப்புகளை அதிகப்படுத்தி, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும்.
சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.
அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் என்ன? இந்த வழிகளை பயன்படுத்தி சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு:
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.
மஞ்சள் தூள் மற்றும் பால்:
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் தேவையற்ற முடி வளர்ச்சி தடுக்கப்படும்.
மஞ்சள், உப்பு, எலுமிச்சை சாறு, பால்:
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் பால் விட்டு கலந்து கொண்டு தேவையற்ற இடத்தில் உள்ள முடியுள்ள பகுதியில் தடவி 5 நிமிடம் ஸ்க்ரப் செய்து பின் நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.
கஸ்தூரி மஞ்சள் தூள், பால் :
1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளுடன், சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கலந்து முடிகளின் மீது பூச வேண்டும். இந்த கலவையை 10 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து விட்டு, பின்பு கழுவினால் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு, அந்த இடமும் பட்டு போல் மென்மையாக மாறும். இதை வாரத்திற்கு 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளைக் கரு:
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோளமாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து பின்னர் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்:
ஒரு டேபூள் ஸ்பூன் கடலை மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முடி வளரும் இடங்களில் தடவி நன்கு உலர வைத்து, பின் தண்ணீரால் நன்கு தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான முடியானது நீங்கும்.
கடலை மாவு, மஞ்சள் தூள், கடுகு எண்ணெய்:
ஒரு டேபூள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதை தேவையற்ற ரோமம் உள்ள இடத்தில் 10 -15 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் , முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை:
சருமத்தில் வளரும் முடியின் நிறத்தை பழுப்பு நிறத்தில் மாற்ற, இரவில் படுக்கும் முன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 மாதத்திற்கு, வாரத்தில் 3-4 முறை செய்து வர வேண்டும்.
எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்திய பின்னர் சருமத்திற்கு எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து கொண்டால், அது சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
தயிர் , கடலை மாவு :
தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.
- உடலில் இருக்கும் தீவிர நோய்கள் மெதுவாக உடலை விட்டு நீங்கும்.
- உடலில் உள்ள நச்சுப் பொருள்களை விரைவில் வெளியேற்றும்.
உலகின் பல நாடுகளிலும் இப்போது இயற்கைக்கு திரும்புவோம் என்ற கொள்கை பிரபலமாகி வருகிறது. அதாவது இயற்கை உணவு, நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது, மண் குளியல், சூரிய குளியல் என்று பல்வேறு இயற்கை வளங்களை சார்ந்த வாழ்வியல் முறைகளை பின்பற்றி வாழ்வது.
இயற்கையில் நீரை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறைக்கு லூயி கூனி என்ற ஜெர்மானிய இயற்கை மருத்துவர்கள் அடித்தளமிட்டனர். இவர்களை போல், மண்ணை வைத்து பல நோய்களை குணமாக்க முடியும் என்று மண் சிகிச்சை முறையை அமெரிக்காவில் ஜஸ்ட் என்பவர் அறிமுகம் செய்தார்.
இந்த மண் சிகிச்சை முறையில், உலர்ந்த வண்டல் மண்ணை நன்றாக சுத்தம் செய்து கொள்கிறார்கள். பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மண்ணை சுத்தமான தண்ணீரில் குழம்பாக கரைத்துக் கொண்டு உடம்பு முழுவதும் குறைந்தது ½ சென்டிமீட்டர் கனம் இருக்கும்படி பூசிக் கொள்கிறார்கள்.
இப்படி மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொண்டு இளம் வெயிலில் ½ மணி நேரம் முதல் 1½ மணி நேரம் வரை இருந்து விட்டு பின்னர் உடல் முழுவதும் அந்த மண் நீங்கும் வகையில் நன்றாக குளித்து மண்ணைக் கழுவி விடுவார்கள். இப்படிச் செய்வது உடம்புக்கு இதமாக இருக்கும். இதன் மூலம் உடலில் இருக்கும் தீவிர நோய்கள் மெதுவாக உடலை விட்டு நீங்கும்.
இவ்வாறு மண் குளியல் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை விரைவில் வெளியேற்றும். நோயின் தன்மையை அனுசரித்து உணவிலும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் மண் குளியல் சிறந்த பயன் தருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மண் குளியல் சிகிச்சை தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
- இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை பயன்படுத்துங்கள்.
- சரும எரிச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூட லிப்ஸ்டிக் உபயோகிக்க தவற மாட்டார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே லிப்ஸ்டிக்கை பூசி அழகை மெருகேற்றி விடலாம்.
அதேவேளையில் லிப்ஸ்டிக் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் சில வகை லிப்ஸ்டிக்குகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் உள்பட தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் இடம் பெற்றிருப்பதை ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
அதிலும் 24 மணி நேரத்துக்குள் இரண்டு, மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதில் காணப்படும் குரோமியம் உடலில் கலந்து பாதிப்பை எற்படுத்தக்கூடும்.
பாதிப்புகள்:
* லிப்ஸ்டிக்கில் கலந்திருக்கும் ஈயம் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* லிப்ஸ்டிக்கில் காணப்படும் பித்தலேட்டுகள் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
* பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் உள்ளிட்டவையும் லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. அவை நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கக் கூடியவை.
* பாரபின் (மெழுகு) என்னும் ரசாயனமும் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது. அது சருமத்துக்குள் எளிதில் ஊடுருவும் தன்மை கொண்டது. சரும எரிச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.
* லிப்ஸ்டிக்கில் உடலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சில நச்சுப்பொருட்களும் உள்ளன. அவற்றை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது தெரியாமல் பலரும் லிப்ஸ்டிக்கை அதிகம் பூசுகிறார்கள். அடர்த்தியாக பூசினால்தான் பளிச்சென்று தெரியும் என்ற எண்ணம் அதற்கு காரணமாக இருக்கிறது.
* லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
* லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக அமையும்.
* லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு என்னும் ரசாயனம் கலந்திருக்கிறது. இது சரும செல்களை சிதைக்கக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
* பெரும்பாலான ரசாயன பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே கவனமாக கையாள வேண்டும்.
* லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவையும் நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உண்டாக்கக்கூடும்.
* அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது சிறுநீரக செயலிழப்புக்கும் வித்திடலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதுதான் அதற்கு காரணம். எனவே லிப்ஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அழகு கலை நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு பயன்படுத்துவது சிறப்பானது.
மனதில் கொள்ள வேண்டியவை:
* அடர் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை அதிக அளவில் நச்சு ரசாயனங்களின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்.
* லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
* நச்சு இல்லாத அல்லது இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை உபயோகிப்பதற்கு முயற்சியுங்கள்.
* கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் பூசுவதை தவிருங்கள். அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
* வாரத்தில் 2-3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்.
- சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
- நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும்.
தேங்காய் எண்ணெய்
குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான மென்மையாக்கலாக அமைகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
மேலும், இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்ந்த காலநிலையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.
அடிக்கடி ஈரப்பதமாக்குவது
குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். இதற்கு குளித்த உடனேயே நறுமணம் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரப்பதத்தை அடைக்கலாம். இவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதன்படி, ஹைலூரோனிக் அமிலம், செராமைடுகள் அல்லது கிளிசரின் போன்ற உட்பொருட்களைக் கொண்ட மறைவான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்துவது
வீட்டிற்குள் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்க, ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். மேலும், இது சரும வறட்சியைத் தடுக்க உதவுகிறது. எனவே, படுக்கையறை அல்லது வசிக்கும் இடத்தில் ஈரப்பதமூட்டியை இணைப்பது, உட்புற வெப்பத்தை பயன்படுத்தினாலும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.
ஓட்ஸ் குளியல்
ஓட்ஸ் குளியல் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது சரும எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. மேலும், ஓட்மீல் குளியல் சருமத்தில் அரிப்புகளை நீக்குவது மட்டுமல்லாமல், ஈரப்பத இழப்பைத் தடுக்க ஒரு பாதுகாப்பு தடையை வழங்குகிறது.
ஆய்வு ஒன்றில், ஓட்மீல் சாறுகள் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது லேசான, மிதமான அரிப்பு மற்றும் வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வில், கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது வீக்கமடைந்த அரிக்கும் தோலழற்சியை அமைதிப்படுத்துகிறது. இது அரிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது.
நீரேற்றமாக இருப்பது
குளிர்காலத்தில் சரும அரிப்புக்கான மேற்பூச்சு சிகிச்சைகள் போலவே உள்ளிருந்தும் நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். மேலும், இது சருமத்தின் ஒட்டுமொத்த நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது வறட்சி மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
- இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
- கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை.
முடி உதிர்தல் பிரச்சனை எந்த அளவுக்கு கவலையை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இள நரை பிரச்சனையும் நிம்மதியை தொலைத்துவிடும். அதற்கேற்ப இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
இன்றைய ஐ.டி. யுகத்தில் இளம் தலைமுறையினர் பலரும் இணையதளத்திலேயே கண்ணும், கருத்துமாக மூழ்கி இருப்பதும், நேர மேலாண்மையை கடைப்பிடிக்காமல் விரும்பிய உணவுகளை இஷ்டப்பட்ட நேரத்தில் ருசிப்பதும், முதுமையில் வர வேண்டிய நரை இளமையிலேயே வந்துவிடுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.
திருமணம் செய்ய வேண்டிய வயதில் இப்படி இள நரையுடன் காட்சி அளிப்பது, இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைப்பதற்கு பெருந்தடையாக அமைந்துவிடுகிறது.
இள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? அதனை தடுப்பதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அது பற்றிய இணையதள தேடலும் அதிகரித்திருக்கிறது.
இளநரை வந்த பிறகு தடுப்பதற்கு முயற்சிப்பதை விட, இளநரை வராமல் காப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
கூந்தலை இளமையாக வைத்துக்கொள்ள, இளநரை இல்லாமல் பாதுகாத்து கொள்ள, நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமையும். நெல்லிக்காயை நன்கு அரைத்து சாறு பிழிந்து அதே அளவுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால் இளநரை வராமல் தடுக்கலாம். தலையில் ஆங்காங்கே ஓரிரு இள நரை முடிகள் இருந்தால் அதன் மீதும் தடவி வரலாம்.
இள நரை பாதிப்புக்குள்ளானவர்களின் அடுத்த கேள்வி, எதையாவது சாப்பிட்டால் இளநரை சரியாகுமா என்பது தான். இவர்கள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை.
தம் பெயரிலேயே "கரு" (மை) சேர்ந்த இந்த இலை நம் கூந்தலையும் நிச்சயம் கருமையாக மாற்றும். சிலருக்கு பித்தத்தினால் கூட தலையில் நரை தோன்றும். இவர்கள் காலையில் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில் இரண்டு துளி தேன் சேர்த்து பருகி வந்தால் பித்த நரை வந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும்.
நிறைய வீடுகளில் இப்பொழுதெல்லாம் மூங்கில் மரத்தை வாஸ்துவுக்காக வளர்க்கிறார்கள். மூங்கில் இலையும் சரி, அது தரும் அழகும் சரி நம்மை என்றுமே இளமையாக வைத்திருக்க உதவும்.
மூங்கில் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் இரண்டு வார காலம் வரை ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தடவி வந்தால், நரை இல்லாத முடி நிச்சயம் கிடைக்கும்.
வெந்தயம், சீரகம், வால்மிளகு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து பொடி செய்து அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் இள நரையால் வந்த மனக்குழப்பம் காணாமலேயே போய்விடும்.
தினமும் பல வகையான கீரை உணவுகளை சாப்பிடணும். கரிசலாங்கண்ணி கீரை நம் கண்ணுக்கு குளுமை தந்து, கூந்தலுக்கு இளமை தரக்கூடிய கீரை.
இந்த கீரையை நன்றாக அரைத்து, அதிலிருந்து சாறும் எடுத்து அதை அப்படியே தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயவைத்து தேய்த்து பாருங்கள். பசுமை மாறா இந்த கீரை, கருமை மாறா கூந்தலை பரிசளித்ததை எண்ணி பாராட்டுவீர்கள்.
முருங்கைகீரையும் முடி வளர்ச்சிக்கும், இளநரைக்கும் தீர்வு தரக்கூடியது.
- இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம்.
- காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே நல்லது.
தற்போது பல பெண்கள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தலைக்கு குளிப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் பெரும்பாலானோர் தூங்குவதற்கு முன் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இரவில் தலைக்கு குளிக்கும்போது, நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் வரும் என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இரவில் தலைக்கு குளிக்கும் வழக்கம் சரிதானா? இந்த கேள்விக்கு பதில், 'இல்லை' என்பதே.
இரவில் தலைக்கு குளிப்பது, தலைமுடியை சேதப்படுத்துகிறது, முடி உதிர்வுக்கு காரணமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இரவில் தலைமுடியை கழுவுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் கூறும் பிற காரணங்கள்...
கூந்தல் பலவீனம்
பெண்கள் இரவில் தலைமுடியை அலசுவதால், அவர்கள் ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இது முடியை எளிதில் உடையக்கூடியதாக மாற்றுகிறது. நீரின் செயல்பாட்டின் காரணமாக, தலைமுடியின் தண்டை பாது காக்கும் வேர்களின் கெரட்டின் செதில்கள் தளர்ந்து, பாதுகாப்பு தடை பலவீனம் அடை கிறது.
தலைமுடியில் நுண்துளைகள் ஏற்படுகின்றன. முடிக்கு ஏற்படும் சேதங்களை அதிகரிக்கின்றன. பொடுகு பிரச்சனை கூடுகிறது. ஈரமான முடியுடன் படுக்கைக்குச் செல்வது, உச்சந்தலையில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இது எரிச்சல், சிவத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இரவில் வெள்ளை செதில்கள் மற்றும் பொடுகு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
முடி உதிர்வு
பொதுவாகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின் அதிக முடி உதிர்வை நாம் காண்கிறோம். இந்த நிலையில் இரவில் தலைக்குக் குளிக்கும்போது ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்வதால், முடிகளில் நார்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. தலையணையில் உராய்தல் பிரச்சனை. காலையில் முடி உதிர்வதை ஊக்குவிக்கும். மேலும் சிக்கு மற்றும் முடி உடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
முடியின் தரம் குறையும்
தூங்குவதற்கு முன் குளித்தால், காலையில் சுத்தமான, பளபளப்பான கூந்தலை நாம் பெறுவோம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். அதிக ஈரப்பதம் மற்றும் ஈரமான இழைகள் காரணமாக உங்கள் தலைமுடி இரவிலேயே வழுவழுப்பானதாக மாறிவிடும். அடுத்த நாள் காலையில் தலைமுடி பிசுபிசுவென்று இருக்கும்.
பிற பிரச்சனைகள்
இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். இது உங்கள் முடி இழைகள் மற்றும் உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவற்றுக்கும் உடனடியாக வழிவகுக்கும். இந்த ஈரப்பதம் பூஞ்சைகள் மற்றும் சிறிய பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை தவிர்க்க, காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே நல்லது.
தவிர்க்க முடியாமல் இரவு நேரத்தில் குளிக்க நேர்ந்தால் அல்லது இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது என்று நீங்கள் கூறினால், தலைமுடியை நன்கு உலர்த்திய பின்பே படுக்கைக்குச் செல்லுங்கள்.
- ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது.
- எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும்.
ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது. அதனால் தான் பருவ வயதினருக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த பருவத்தில் ஆண்ட்ரோஜன் என்ற பாலின ஹார்மோன் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் மோசமான வாழ்க்கை முறையாலும் முகப்பரு பிரச்சனை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது சருமத்தின் கீழ் பகுதியின் உள்ள செபாசியஸ் என்னும் சுரப்பியை தூண்டி அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது.
இதனால் சருமத்தின் எண்ணெய் பசை அதிகரிக்கும். இதனுடன் தூசி, பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் சேர்ந்து பருக்கள் ஏற்படுகிறது. அதிக முகப்பரு காரணமாக சிலர் நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கு செல்வதற்கும் போட்டோ எடுப்பதற்கும் கூட அஞ்சுகின்றனர்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்:
சாதாரண சருமத்தை விட எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும். ஆகையால் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.
முக்கியமாக வெளியில் சென்று விட்டு வந்தவுடன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும்.
இதற்கு கற்றாழையால் செய்யப்பட்ட ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம். முகம் கழுவும் போது முகத்தில் சிறிது மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்யும் போது முகப்பரு ஏற்படுவது குறையும்.
சில நேரங்களில் வெயிலில் செல்வதாலும் முகப்பரு ஏற்படலாம். எனவே பகலில் வெளியில் செல்வதற்கு முன்பு சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம்.
கிரீன் டீ ஃபேஸ் பேக்:
கிரீன் டீயில் உள்ள ரசாயன கலவையில், சருமத்திற்கு நன்மை செய்யும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. அவை முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்குவதாக கூறப்படுகிறது.
ஒரு கிண்ணத்தில் கிரீன் டி தூளை போட்டு அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் போட்டு வர முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகரில் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்புகள் நிறைந்துள்ளன. ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ, முகப்பரு பிரச்சினை தீரும்.
கடல் உப்பு ஸ்க்ரப்:
பருவ வயதினர் வாரந்தோறும் முகத்தை ஸ்க்ரப் செய்வது அவசியம். ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை, காபி தூள், கடல் உப்பு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை போட்டு முகத்தில் தேய்த்து வர கரும்புள்ளிகள், பருக்கள் வராமல் இருக்கும்.
விட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றை வாழ்க்கையில் நடைமுறைபடுத்திக்கொள்ள வேண்டும்.
செய்யக்கூடாதவை:
செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, முகப்பரு பிரச்சனை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
- முகத்தில் நிச்சயம் வித்தியாசம் தெரியும்.
- தேவையற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது.
பெண்கள் எப்போதும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயற்கையானது. இதற்கு பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ் கிரீம்களை சோப்புகள் முகத்தை கழுவும் பழக்கம் உள்ளது.
இயற்கை அழகுக்கு செயற்கையான சோப்பும் கிரீம்களும் எதற்கு? நமது அழகு கெடாமல் இருக்கவும் அந்த அழகை அதிகரிக்கவும் ஒரு சில இயற்கை பொருட்கள் போதும். செயற்கை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.
தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக இந்த இரண்டு பொருட்களை கொண்டு முகத்தை கழுவுங்கள். வித்தியாசத்தை நன்றாக பார்க்கலாம். இது எளிதான முறையும் கூட. அது என்ன முறை என்பதை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முல்தானி மெட்டி (முல்தானி மண்)
தக்காளி
இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுது கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் வட்டமாக மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 2 நிமிடம் கழித்து சிறிது காய்ந்ததும் தண்ணீரில் முகத்தை கழுவலாம். சோப்புக்குப் பதிலாக காலையிலும் மாலையிலும் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும்.
உங்கள் முகத்தில் உள்ள வெள்ளை செல்கள், கருப்பு செல்கள், முகப்பரு போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த முல்தானி மெட்டி உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். சருமத்தை மென்மையாக்குகிறது.
தக்காளி விழுது உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தக்காளி பழ விழுது உங்கள் சரும நிறத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த முறையை தினமும் தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் முகத்தில் நிச்சயம் வித்தியாசம் தெரியும் என்பதில் சந்தேகம் இல்லை.
- ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.
- சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நம்முடைய சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் நல்ல பலன் அளிக்கும் என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நாம் முகத்துக்கு பயன்படுத்தப்படும் சார்க்கோல் என்பது ஆக்டிவேட்டடு சார்க்கோல் ஆகும். ஆக்டிவேட்டடு சார்க்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.
இது அழகு சாதனப்பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
சருமத்தின் துளைகளில் இருக்கும் துகள்களை ஆழமாக சுத்தம் செய்ய இந்த சார்கோல் ஃபேஸ் மாஸ்க், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சருமத்தில் இருக்கும் துகள்களால் சருமம் எளிதில் வெடிப்பு, எண்ணெய் பசை போன்றவற்றை உண்டாக்கும். இதை எளிதில் சரிசெய்வதற்கு சார்கோல் ஃபேஸ் மாஸ்க் உதவுகிறது.
சார்கோல், அடைப்பை சரி செய்து சருமத்தை சுத்தமாக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் தொற்று முகப்பரு போன்றவை குறைகிறது.
அதிகப்படியான வியர்வை, திறந்த காயம், அழுக்குப்படிவது மற்றும் முகச்சீர்ப்படுத்தும் கருவிகளை பலரும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சருமத்தில் அழுக்குகள் தேங்கும். அப்போது சார்கோல் பயன்படுத்தினால், நல்ல பலனைத் தரும்.
ஆக்டிவேட்டட் கரித்தூளில் உள்ள துகள்கள் சருமத்தில் இறந்த சரும செல்களை துடைக்க உதவுகிறது. மேலும் பளிச்சென்ற சருமத்தை அளிக்க உதவுகிறது.
ஆக்டிவேட்டட் சார்கோல் எண்ணெய் சருமத்துக்கு சிறந்த துணையாக இருக்கும். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்குவதால் சருமம் வறண்டிருந்தாலும் கூட, சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்கவும் இது உதவுகிறது.
மேலும் இதை ஆலோவேரா உடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு சீரான பிரகாசத்தையும் கொடுக்க உதவுகிறது.