search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்பு"

    • மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
    • தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

    சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

    இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

    ஏற்கனவே கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் சிலம்பரசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
    • நயன்தாரா மற்றும் தனுஷ் விழாவில் கலந்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நயன்தாரா மற்றும் தனுஷ் விழாவில் கலந்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று இரவு நடந்த திருமண பார்ட்டியில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு கலந்துக் கொண்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிம்பு மற்றும் தனுஷ் இடையே எப்பொழுதும் ஒரு பகை போட்டி இருக்கும் என திரையுலகில் இருப்பவர்கள் அறிந்ததே. ஆனால் அதை எல்லாம் பொய் என நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து விழாவில் கலந்துக் கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உண்மை சம்பவத்தை தழுவி படத்தை அற்புதமாக செதுக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுகள்.
    • ஜி.வி.பிரகாஷின் இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றியுள்ளது.

    நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

    ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

    அந்த வகையில், 'அமரன்' படக்குழுவை நடிகர் சிம்பு பாராட்டியுள்ளார். சிம்பு கூறியிருப்பதாவது:-

    'அமரன்' படத்தை மனப்பூர்வமாக ரசித்தேன். நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை சாய் பல்லவியும் கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். உண்மை சம்பவத்தை தழுவி படத்தை அற்புதமாக செதுக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுகள். ஜி.வி.பிரகாஷின் இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றியுள்ளது என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
    • நடிகர் சிம்புவின் 48 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்

    தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழரசன் இயக்குனர், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா ஆகியோர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

    சிம்புவை சந்தித்த புகைப்படத்தை நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்து சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் 48 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்ததக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிம்பு நடிக்கப்போகும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்
    • அஷ்வத் மாரிமுத்து தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிம்பு நடித்த `பத்து தல' திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

    இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.

    இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார் அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.

    தற்பொழுது அவர் நடிக்கப்போகும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இவர் அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

    இதுக்குறித்து வெளியிட்ட போஸ்டரில் சிம்பு அவரது 2000 களில் வெளிவந்த படங்களில் உள்ள கெட்டப்பில் இருக்கிறார். கையில் கர்சீப் சுற்றி, டேட்டூ குத்தி மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் உள்ளார்.

    அஷ்வத் மாரிமுத்து தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது
    • ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பின்னணியில் ஏஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

    பிவிஆர் திரையில் கடந்த 142 வாரங்களாக [2.75 ஆண்டுகளாக] இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீரிலீசில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்ற சாதனையை தனதாகியுள்ளது விண்ணைத் தாண்டி வருவாயா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
    • அடுத்த பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    சிம்பு நடித்த `பத்து தல' திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

    இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.

    இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார் அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது அடுத்த பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு 6.06 மணிக்கு ஷார்ப்பா வரேன்" என பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது எதைக் குறித்த அப்டேட் என எந்த தகவலும் இல்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

    இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
    • தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

    இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.

    இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் 2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.

    இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
    • பியார் பிரேமா காதல் மற்றும் மாமனிதன் திடைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தி கோட் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்த வருகிறார்.

    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திடைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.

    இந்நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இயக்குநர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த யுவன் சங்கர் ராஜா, "தான் இயக்கப்போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராக்கெட் டிரைவர் படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
    • 'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது.

    ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக 'ராக்கெட் டிரைவர்' உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

    இப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர். வெளியிட்டார். தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், 'ராக்கெட் டிரைவர்' புதிய படமாக இணையும் என்று தெரிகிறது.

    'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் ஆட்டு ஓட்டுநர், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார்.

    இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கும் போது ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் கலகலப்பாகவும், பொழுதுபோக்காகவும் சொல்லும் கதையை கொண்டுள்ளது.

    இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுக நாயகன் விஸ்வத் நடிக்கிறார். நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    'ராக்கெட் டிரைவர்' படத்திற்கு கௌசிக் கிரிஷ் இசையமைக்க, ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியனும், கலை இயக்க பணிகளை பிரேம் கருந்தமலையும் மேற்கொண்டனர்.

    இந்தப் படத்தின் கதையை அக்ஷய் பூல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்குகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    இயக்குநர் மணிரத்னம், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் "தக் லைஃப்". கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் இந்த படத்தின் மூலம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

    தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    வீடியோவில் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
    • இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

    தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி சிம்பு, கமல்ஹாசன், மணிரத்னம் , சுஹாசினி மற்றும் சிலர் ஒன்றாக புகைப்படக் எடுத்துள்ளனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×