என் மலர்
நீங்கள் தேடியது "நகம்"
- சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
- சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம்.
நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றிநோய் ஏற்படவும் காரணமாகிறது.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கிவிடலாம்.
* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும்.
* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.
* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
* சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
- நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:
பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:
பூஞ்சை தொற்று: இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது. பொதுவாக கால் விரல்களை பாதிக்கிறது. குறிப்பாக காலில் ஷூ அல்லது விரல்களை மூடுமாறு அணியும் காலணிகளை அணிபவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படும் இந்த தொற்று ஒனைக்கோமைக்கோசிஸ் அல்லது டினியா உன்குயம் என்று அழைக்கப்படுகிறது.
நகங்களில் ஏற்படும் காயம்: நகத்தின் மேல் காயம் ஏற்பட்டால் நகத்தின் கீழ் உள்ள ரத்த நாளங்களை வெடிக்க செய்து, ரத்தம் அதிகமாக சேர்ந்து நகத்தின் நிறத்தை மாற்றும். பொருந்தாத காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகளை அணிந்து நடப்பது, ஓடுவது அல்லது வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தம் அல்லது காயங்களால் நகத்தின் நிறம் மாறலாம்.
மெலனோமா: சில சமயம் ஓர் அரிய நிகழ்வாக தோலில் ஏற்படக்கூடிய மெலனோமா புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் கருமையாக மாறும்.
நோய் பாதிப்பு: இதய நோய், சிறுநீரக பாதிப்பு அல்லது ரத்த சோகையினால் கூட நகத்தின் நிறம் கருப்பாக மாறலாம். உங்கள் கால் நகம் கருப்பாக மாறும் போது மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அது குறித்து தகுந்த பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம்.
- நெயில் ஆர்ட் டிசைனில் நகங்கள் விற்கின்றன.
'நெய்ல் ஆர்ட்' எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும் அழகாக வளர்த்து, சுத்தப்படுத்தி, பிறரை கவரும் விதத்தில் பல்வேறு வகையான அலங்காரங்களை செய்துகொள்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.
பெண்கள் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டு அழகுபடுத்துவது பேஷனா இருந்துச்சு. அதுலயும் பிரவுன், சிவப்பு, பிங்க்ன்னு குறிப்பிட்ட நிறங்கள் மட்டுமே போட்டு வந்தாங்க. அதன்பின் கருப்பு, அடர் நீலம், கரும்பச்சை, வயலெட்… என மாறியது.
இன்றைய பெண்கள் பார்ட்டி, திருமண விழாக்கள், ஹாலிடே ஷாப்பிங் என சூழலுக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டில் பின்னியெடுக்கின்றனர்.
வெறுமனே பாலிஷ் மட்டுமே போடுவதை விட நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம். அழுத்தமான நிறங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கோண்டு அதன் மேல் வெள்ளை கலர் பாலிஷ் டிசைன் போடுவது ஒருவகை நெயில் ஆர்ட். மிக நுணுக்கமான டிசைனைப் போட ஸ்டாம்பிங் நெயில் ஆர்ட்டும் இருக்கிறது.
பூக்கள் புள்ளிகள் ஜியாமெட்ரிக் டிசைன்கள் அவரவர் ராசிகள் என தீம் டிசைன்கள் போடுகிறார்கள். ஸ்டென்சில் முறையில் இந்த டிசைன்களை நெயிலில், ஸ்டாம்ப் பண்ணினால் மிக அழகாக இருக்கும்! தவிர ரெடிமேடாக நெயில் ஆர்ட் டிசைனில் நகங்கள் விற்கின்றன. அதையும் வாங்கி அதிலிருக்கும் க்ளு வைத்தே நம் நகங்களில் ஒட்டிக்கொள்ளலாம். சாதாரண நெயில் பாலிஷில் நெயில் ஆர்ட் நன்றாக வராது. அழுத்தமாக நிற்கவும் நிற்காது. இதற்கென ஸ்பெஷல் நெயில் பாலிஷ் விற்கிறது.
- நக பராமரிப்புக்கு எலுமிச்சை பழத்தையும் உபயோகிக்கலாம்.
- பாதாம் எண்ணெய்யை நகங்களில் தடவி மசாஜ் செய்யலாம்.
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இப்போது நக பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். நகங்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அதுவே உடல் நலனை பிரதிபலித்துவிடும். சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வேறு நிறமாற்றங்களுடனோ காணப்படும். அது ஏதேனும் நோய் பாதிப்புக்கான அறிகுறியாகத்தான் இருக்கும் என்று பயப்பட தேவையில்லை. மஞ்சள் நக பிரச்சினை கொண்டவர்கள் நகங்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
நகங்களை முறையாக சுத்தம் செய்யாதது, நெயில் பாலிஸை அளவுக்கு அதிகமாக நகங்களில் தடவுவது போன்ற காரணங்களாலும் நகங்கள் நிறமாற்றம் அடையக்கூடும். பேக்கிங் சோடா மற்றும் பற்களை வெண்மையாக்கும் பேஸ்டுகளை கொண்டு கூட நகங்களை சுத்தம் செய்யலாம். இவை சருமத்தில் எதிர்மறையான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. துத்தநாகம் மற்றும் பயோட்டின் அதிகம் நிரம்பிய உணவுகளை உட்கொள்ளலாம். இவை நகங்களை வலுவாக்கும். நகங்கள் பளபளப்புடன் காட்சி அளிப்பதற்கும் உதவும்.
நக பராமரிப்புக்கு எலுமிச்சை பழத்தையும் உபயோகிக்கலாம். ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில், எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். அந்த நீரில் நகங்களை முக்கி மூன்று நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு நகங்களை உலரவைத்துவிட்டு கைகளை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் நகங்களில் படிந்திருக்கும் கறைகள் நீங்கும். நகங்கள் பிரகாசிக்கவும் செய்யும்.
வைட்டமின் ஈ மாத்திரைகள், வைட்டமின் ஈ லோஷன்கள் போன்றவையும் நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை போக்க உதவும். வைட்டமின் ஈ நிறைந்த ஆமணக்கு எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யையும் நகங்களில் தடவி மசாஜ் செய்யலாம். இதுவும் மஞ்சள் நிறத்தை போக்க உதவும். பூஞ்சை தொற்றுகளை விரட்டும் லோஷன்கள், மருந்துகளையும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
கால் மற்றும் விரல் நகங்கள் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் காட்சி அளிப்பதற்கு வாரம் ஒருமுறை ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வரலாம். வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த நக பாலிஷ்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நகங்களை கடிப்பதையும் நிறுத்த வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவும் பழக்கத்தையும் பின்பற்றி வர வேண்டும். மேலும் கைகளை எப்போதும் உலர்வாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். நகங்களை முறையாக பராமரித்து வந்தாலே மஞ்சள் நிறமாக மாறுவதை தடுத்துவிடலாம்.
- நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
- ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும்.
அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும். அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம்.
* நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள். பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.
* அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.
* ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.
* நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் 'நகச்சுற்று' போன்ற பிரச்சினைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.
* 'கியூட்டிக்கிள்' எனப்படும் நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.
* புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
* ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும். இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
- நக பராமரிப்பில், அறிமுகமாகியிருக்கும் நவீன அழகியல் இது.
- கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகம் இவ்விரண்டிலும் இதை செய்ய முடியும்.
பேஷன் உலகில் அன்றாடம் புதுமைகள் புகுந்துக்கொண்டே இருக்கின்றன. உடலையும், முகத்தையும் அழகுபடுத்துவது என்பதை தாண்டி... உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அழகுபடுத்தும் புதுப்புது அழகுக்கலைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், 'நெயில் எக்ஸ்டென்ஷன்' எனப்படும், செயற்கை நக உருவாக்கமும் அழகுக்கலை பிரிவில், புதிதாக இணைந்திருக்கிறது.
அது என்ன அழகுக்கலை, எப்படி செய்யப்படுகிறது... போன்ற கேள்விகளுடன், சென்னை வடபழனியை சேர்ந்த விஜயலட்சுமியை சந்தித்தோம். 'நெயில் எக்ஸ்டென்ஷன்' எக்ஸ்பெர்ட்டான இவர், அந்த கலைப்பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
* 'நெயில் எக்ஸ்டென்ஷன்' என்றால் என்ன?
பொதுவாக நகத்தை அழகுபடுத்துவதும், அலங்கரிப்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது, அழகான தோற்றத்திற்காக, செயற்கை நகங்களை உருவாக்குவது. பெண்களின் தேவைக்கு ஏற்றார்போன்ற அளவுகளில், செயற்கை நகங்களை உருவாக்கி, அதை அவர்களுக்கு பிடித்த முறையில் அழகுபடுத்த முடியும். நக பராமரிப்பில், அறிமுகமாகியிருக்கும் நவீன அழகியல் இது.
* நெயில் எக்ஸ்டென்ஷன் பற்றிய புரிதல் டீன்-ஏஜ் பெண்கள் மத்தியில் இருக்கிறதா?
அதிகமாகவே இருக்கிறது. அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் அழகுக்கலைகளை டீன்-ஏஜ் பெண்கள் முயன்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். அந்தவகையில், நெயில் எக்ஸ்டென்ஷன் கல்லூரி மாணவிகள் தொடங்கி அலுவலகம் செல்லும் பெண்கள் வரை எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நிறைய சின்னத்திரை-வெள்ளித்திரை நடிகைகள் நெயில் எக்ஸ்டென்ஷன் செய்திருக்கிறார்கள். நானே, பல நட்சத்திரங்களுக்கு புதுமையான டிசைன்களை செய்து கொடுத்திருக்கிறேன்.
* நெயில் எக்ஸ்டென்ஷன் எப்படி செய்கிறீர்கள்?
கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகம் இவ்விரண்டிலும் இதை செய்ய முடியும். செயற்கையாக நகம் உருவாக்கி, அதை புதுப்புது வழிகளில் அழகுபடுத்த முடியும். அதாவது இயல்பான நகப்பூச்சு அலங்காரமும் செய்யலாம். அழகழகான டிசைன்களை கொண்டு, வண்ணம் அல்லது ஓவியம் வரையவும் முடியும். இல்லையென்றால், போட்டோக்களை கூட செயற்கை நகங்களாக மாற்றி அழகாக்க முடியும்.
* செயற்கை நகம் என்பதால் உறுதிதன்மை எப்படி இருக்கும்?
நகத்தின் அடிப்பாகத்தில் இருந்தே செயற்கை நக உருவாக்க பணிகள் நடைபெறும் என்பதால், உறுதியாகவே இருக்கும். மேலும் செயற்கை நகத்தையும், நக பகுதியையும் பசை கொண்டே ஒட்டுவதால், நீண்ட நாட்களுக்கு அழகாக இருக்கும்.
* என்னென்ன விசேஷங்களில் இதை விரும்பி செய்கிறார்கள்?
திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களில் இவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் மணமகள் என்பதை தாண்டி மணமகள் தோழிகள், உறவினர்கள் என அனைவருமே, இந்த அழகுக்கலையை விரும்புகிறார்கள்.
* இவை எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குமா?
ஆம்..! நிச்சயமாகவே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். ஏனெனில், நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இதுபற்றிய தேடல் இளம் பெண்கள் மத்தியில் உருவாகி இருப்பதால், இதை முயன்று பார்க்கவும், பயிலவும் நிறைய பெண்கள் ஆசைப்படுவார்கள்.
* உங்களுக்கு கிடைத்த விருது, கவுரவங்களை பற்றி கூறுங்கள்?
ஒருசில விருது வாய்ப்புகள் வந்தபோதும், வெளியூர்களில் இருந்ததால் அவற்றை தவறவிட்டிருக்கிறேன். என்றபோதும், அதைவிட நான் நக அழகு செய்து, அதன் மூலம் நிறைய இளம் பெண்கள் மனம் பூரித்ததை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
- நகப்பூச்சை நீக்க நெயில் பாலிஷ் ரிமூவரை உபயோகிப்பார்கள்.
- இது நகத்திலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும்.
கைவிரல்களுக்கு மகுடமாக இருப்பது நகங்கள். அவற்றை பராமரிப்பதில் பெண்கள் தனி ஆர்வம் காட்டுவார்கள். அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நிறத்தில் நகங்களுக்கு சாயம் பூசுவார்கள். அதை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் எனும் ரசாயனத்தை உபயோகிப்பார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நகங்களிலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும். இதைத் தவிர்த்து, எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நகங்களின் பளபளப்பை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே...
எலுமிச்சை: எலுமிச்சையில் இருக்கும் அமில மூலக்கூறுகள் நகப்பூச்சுக்குள் ஊடுருவும் தன்மை கொண்டது. சில துளிகள் எலுமிச்சை சாறினை நகங்களில் விட்டு தேய்ப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்க முடியும். எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சோப் அல்லது வினிகர் கலந்தும் பயன்படுத்தலாம்.
பற்பசை: பற்பசையில் எத்தில் அசிடேட் எனும் ரசாயன கலவை உள்ளது. இது நெயில் பாலிஷ் ரிமூவர் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சிறிதளவு பற்பசையை எடுத்து நகங்களில் தடவி, ஐந்து நிமிடம் கழித்து மெதுவாக துடைத்து எடுப்பதன் மூலம் நகப்பூச்சை எளிதாக நீக்க முடியும்.
சானிடைசர்: சானிடைசர் தற்போது அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகிறோம். அதை நகப்பூச்சை நீக்குவதற்கும் உபயோகிக்கலாம். நகங்களின் மீது சிறிதளவு சானிடைசரை தெளித்து பஞ்சு கொண்டு துடைத்து எடுக்கலாம்.
ஹேர் ஸ்பிரே: நெயில் பாலிஷ் ரிமூவருக்கு பதிலாக ஹேர் ஸ்பிரேவையும் பயன்படுத்த முடியும். கிண்ணத்தில் சிறிதளவு ஹேர் ஸ்பிரேவை ஊற்றி அதில் பஞ்சினை நனைத்து, நகங்களை அழுத்தி துடைப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்கலாம். டியோடரண்டும் இதற்கு உதவும்.
வாசனை திரவியம்: டிஷ்யூ பேப்பர் அல்லது பஞ்சில் சிறிது வாசனை திரவியத்தை தெளித்து அதைக் கொண்டு நகங்களை அழுத்தித் துடைப்பதன் மூலமும் நகப்பூச்சை நீக்க முடியும்.
வெந்நீர் மற்றும் சோப்பு: வெந்நீரில் சிறிதளவு சோப்பைக் கலந்து அதில் நகங்களை சிறிதுநேரம் வைத்திருங்கள். பின்னர் நகவெட்டியில் உள்ள தேய்ப்பானை பயன்படுத்தி நகப்பூச்சை நீக்கலாம்.
நகங்களுக்கான பராமரிப்புகளை தினமும் செய்ய வேண்டுமா?
உங்கள் நகங்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் அவற்றை சுத்தம் செய்து மாய்ஸ்சுரைசர் பூச வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டிரிம் செய்ய வேண்டும்.
நகங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி பூசலாமா?
நகங்கள் வறண்டு போவதைத் தடுக்க தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை நகங்களின் மீது பூசலாம்.
கர்ப்பிணி பெண்கள் நகப்பூச்சு பூசலாமா?
உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு உண்டாக்கும் ரசாயனக் கலவைகள் சேர்க்காத நகச்சாயங்களை பயன்படுத்தலாம்.
நகங்களை கடிப்பது அவற்றுக்கு சேதம் ஏற்படுத்துமா?
நகம் கடித்தல் சுகாதாரம் இல்லாத பழக்கமாகும். இது நடத்தைக் கோளாறாகக்கூட இருக்கலாம். நகக்கணுக்கள் பாதிக்கப்படும்போது நகத்தின் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம்.
- நகங்களை கடிப்பது விரல்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
- பல்வேறு தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும்.
நகங்களை கடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு சிறுவயதிலேயே வந்து விடுகிறது. டென்ஷனாகவோ, மனக்குழப்பத்திலோ இருந்தால் நகத்தை கடிக்கும் சுபாவமும் பலரிடம் இருக்கிறது. அப்படி நகங்களை கடிப்பது விரல்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல்வேறு தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். நகங்களுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்கள் தொற்று பாதிப்பை அதிகப்படுத்திவிடும். நகத்தை தொடர்ந்து கடிப்பதால் விரல்களில் வீக்கம் ஏற்படுவது, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறுவது, சீழ்படிவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
பல் ஈறுகளில் காயம், முன்புற பற்களில் குறைபாடு போன்ற வாய்வழி பிரச்சினைகளும் நகம் கடிப்பதால் உண்டாகும். நீண்டநாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பற்களில் கறைகளை உருவாக்கி இறுதியில் பற்களை சிதைத்துவிடும். பற்களில் விரிசலையும் ஏற்படுத்திவிடும். நகங்களை கடிக்கும்போது அதிலிருக்கும் துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், நோய்தொற்று போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிறுதொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
நகம் கடிக்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்கள் எளிதில் குற்ற உணர்வுக்கு ஆளாகுவார்கள். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பும் குறைந்துபோகும். நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நெயில் பாலிஷ் உபயோகிக்கலாம். அதில் டெனாடோனியம் பென்சோயேட் எனும் ரசாயனம் கலந்திருக்கிறது. அது கசப்பு தன்மை கொண்டது. அது நகம் கடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும். பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.
- விரும்பிய வண்ணம் நீளமாக நகம் வளர்ப்பது சாத்தியமானதுதான்.
- நீளமாக நகம் வளர எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலுவான நகங்கள் தங்கள் கைகளை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி நகங்கள் வளர்க்க ஆசைப்பட்டாலும் அது சாத்தியமாவதில்லை. ஆசை ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்துபோய்விடுவதை பார்த்து வேதனை அடைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைக்க முடியாத சூழலில் நகங்களுக்கு ஈரப்பதமூட்டும் கிரீம்களை உபயோகிக்கலாம்.
நகங்கள் எளிதில் உடையக்கூடிய வகையில் பலவீனமாக இருந்தால் புரதம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டியிருக்கும். நீண்ட மற்றும் வலிமையான நகங்களை பெறுவதற்கு போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.
நகங்களின் அடி விளிம்பு பகுதியில் அமைந்துள்ள தோல் அடுக்கான கியூடிக்கிள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமானது. ஆணி படுக்கை என்று அழைக்கப்படும் இது நகங்களின் வேர் பகுதியில் இருந்து வளரும் புதிய நக அடுக்கை பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். கியூட்டிக்கிள் பகுதியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு கியூட்டிக்கிள் ஆயில் உபயோகிக்கலாம். அது நகம் உடைவதை தடுக்கும். எனினும் இதனை அதிகம் உபயோகிக்கக்கூடாது.
நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள்தான் எளிதில் உடைந்து போகாது. மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம். அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவும்.