search icon
என் மலர்tooltip icon

    கணினி

    M2 மற்றும் M2 ப்ரோ சிப் கொண்ட புது மேக் மினி இந்தியாவில் அறிமுகம்
    X

    M2 மற்றும் M2 ப்ரோ சிப் கொண்ட புது மேக் மினி இந்தியாவில் அறிமுகம்

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மினி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல்களுடன் புது மேக் மினி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அடுத்த தலைமுறை சிபியு மற்றும் ஜிபியு, அதிக மெமரி பேண்ட்வித், சக்திவாய்ந்த மீடியா என்ஜின் உள்ளது.

    M2 சிப்செட்-இல் 8-கோர் சிபியு, நான்கு அதீத செயல்திறன் கோர்கள், 10-கோர் ஜிபியு உள்ளது. இது புது மேக் மினி மாடலில் ப்ரோ-ரெஸ் அக்செலரேஷன் வழங்குகிறது. புதிய M2 பிராசஸர் ஒரே சமயத்தில் இரண்டு 8K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ, அதிகபட்சம் 12 4K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ ஸ்டிரீமிங் செய்ய முடியும்.

    இதனுடன் அறிமுகமாகி இருக்கும் புது M2 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 12-கோர் சிபியு மற்றும் எட்டு அதீத செயல்திறன் கோர்கள், அதிகபட்சம் 19-கோர் ஜிபியு, 200 ஜிபி மெமரி பேண்ட்வித் மற்றும் அதிகபட்சம் 32 ஜிபி மெமரி உள்ளது. அடுத்த தலைமுறை நியூரல் என்ஜின் M1 மாடலை விட 40 சதவீதம் வேகமானது ஆகும்.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 256 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 59 ஆயிரத்து 900

    மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 79 ஆயிரத்து 990

    மேக் மினி M2 ப்ரோ 10-கோர் சிபியு, 16-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    புதிய மேக் மினி மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ஆப்பிள் ஸ்டோர் ஆப் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க 27 நாடுகளில் புது மேக் மினி மாடல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

    Next Story
    ×